இயக்குநரான லோகேஷ் கனகராஜ் புதிய படம் ஒன்றில் ஹீரோவாக அறிமுகமாக உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
அதாவது, தனுஷ் நடிப்பில் வெளியான ‘கேப்டன் மில்லர்’ படத்தை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இந்த புதிய படத்தை இயக்க உள்ளார். இப்படம் ஒரு அதிரடி ஆக்சன் கதைக்களத்தில் உருவாக இருக்கிறது. இதற்காக தற்போது லோகேஷ் தற்காப்பு கலைகளை கற்று வருகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இப்படம் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், லோகேஷ் கனகராஜுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட அருண் மாதேஸ்வரன், “வன்முறை மட்டும்தான்” எனத் தெரிவித்துள்ளார்.
இதனால், இப்படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் திரைப்படமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.