Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

எமது அரசாங்கம் காணிகளை நிச்சயம் விடுவிக்கும் – உபாலி சமரசிங்க

மே 27, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

விடுவிக்கப்பட சாத்தியமுள்ள அனைத்து காணிகளையும் எமது அரசாங்கம் நிச்சயம் விடுவிக்கும் என கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தெரிவித்துள்ளார்.

உயர்பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள காணி விடுவிப்பு தொடர்பில் வடமாகாண ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற உயர்மட்ட கலந்துரையாடலின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

மக்களின் காணிகளை மக்களுக்கே வழங்க வேண்டும் என்ற ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைவாக, மக்களின் சொந்த காணிகள் மற்றும் பொதுக் காணிகளில் இராணுவ மற்றும் கடற்படை முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அவை நீண்ட காலமாக உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படாமல் , இருப்பதனால் தமது காணிகளை விடுவிக்குமாறு மக்கள் தொடர்ந்து கோரி வருகின்றனர்.

இதனால் கனிகளை விடுவிப்பது தொடர்பில் நேரில் சென்று ஆராயுமாறு , ஜனாதிபதி எங்களுக்கு பணித்துள்ளார்.

அதனால் மக்களின் காணிகளில் அமைந்துள்ள, முகாம்களை நேரில் பார்வையிட்டு, அங்குள்ள நிலவரங்களை ஆராய்ந்து, விடுவிக்க கூடிய காணிகளை விடுவிப்பதற்கான தேவையான நடவடிக்கைகளை எடுக்கவுள்ளோம்.

ஏனைய காணிகள் தொடர்பிலானதும் , எமது நேரடி ஆய்வுகள் தொடர்பிலும் அறிக்கைகளை பாதுகாப்பு அமைச்சுக்கு சமர்பிக்கவுள்ளோம்.

ஜனாதிபதி, விடுவிக்கக்கூடிய அனைத்துக் காணிகளையும் மீண்டும் மக்களிடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கைகளை எடுப்பார்.

எத்தனை ஏக்கர் காணிகளை விடுவிப்போம் என திட்டவட்டமாக கூற முடியாது. இதில் உள்ள பிரச்சினை என்னவென்றால், சில காணிகளில் சட்ட ரீதியான சிக்கல்கள் உள்ளன. அதேபோல், பாதுகாப்புக்குத் தேவையான முக்கிய காரணிகளும் உள்ளன.

எனவே, தற்போது நாம் இவ்வளவு ஏக்கர் என்று குறிப்பிட்ட அளவை நிர்ணயிக்கவில்லை. எனினும், விடுவிக்க கூடிய சாத்தியமுள்ள காணிகளை மக்களிடம் ஒப்படைப்பதற்கு நிச்சயம் நடவடிக்கை எடுப்போம் என தெரிவித்தார்.

முந்தைய செய்தி குறிகாட்டுவானில் மூழ்கிய கடற்பாதையை கரைக்கு கொண்டு வந்த கடற்படையினர்
அடுத்த செய்தி 2013ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை மீள பெற இணக்கம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

வவுனியா தாண்டிக்குளம் ஐயனார் ஆலயத்தில் சங்காபிஷேகம்.

பிப்ரவரி 3, 2025
இலங்கை

மாகாண சபை தேர்தல் தொடர்பில் அரசின் அறிவிப்பு!

செப்டம்பர் 15, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

இரத்தினபுரி மாவட்டத்தின் பலாங்கொடை நகர சபை தேர்தல் முடிவுகள்

மே 6, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

அரச வைத்தியசாலைகளில் மருந்து தட்டுப்பாடு

பிப்ரவரி 21, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?