Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

கனடாவின் சர்வதேச விமான சேவை தாமதங்களுக்கு CBSA கணினி வலையமைப்பில் ஏற்பட்ட திடீர் செயலிழப்புதான் காரணமா?

மே 22, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கனடாவிற்குள் நுழையும் விமானங்கள் மற்றும் கனடாவை நோக்கிப் பயணிக்கும் சர்வதேச விமானங்களின் சேவைகளில், பாரிய தாமதங்கள் ஏற்பட்டமை தொடர்பான விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன. எல்லைப் பாதுகாப்பு முகவரகத்தின் (CBSA) கணினி வலையமைப்பில் ஏற்பட்ட திடீர் செயலிழப்பு (System Outage) காரணமாகவே, இந்தப் பிரச்சினை ஏற்பட்டதாக, முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

நாட்டில் உள்ள 11 சர்வதேச விமான நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள சுயதேவை பரிசோதனை முனையங்கள் (Inspection Kiosks) முற்றிலும் செயலிழந்ததைத் தொடர்ந்து, இந்த நெருக்கடி நிலை உருவானது.

இந்தத் தொழில்நுட்ப முடக்கம் ஆனது, கனடாவிற்குள் வந்தடைந்த பயணிகளை மட்டுமல்லாது, உலகெங்கிலும் உள்ள பல்வேறு சர்வதேச விமான நிலையங்களில் இருந்து கனடா நோக்கிப் புறப்படவிருந்த பயணிகளையும் கடுமையாகப் பாதித்துள்ளது.

இதன் காரணமாக, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான நிலையங்களில் பல்லாயிரக்கணக்கான பயணிகள் கடுமையான அசௌகரியங்களை எதிர்கொண்டதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

தற்போது, கனடா எல்லைப் பாதுகாப்பு முகமை மற்றும் மத்திய தொழில்நுட்பக் குழுக்கள் இணைந்து, இந்தத் தொழில்நுட்ப முடக்கத்திற்கான மூலக் காரணத்தைக் கண்டறியத் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத் தக்கது.

முந்தைய செய்தி அல்பெர்ட்டா பிரிவதைத் தடுக்கச் சுற்றுச்சூழல் விதிகளில் சலுகைகள்! – அதிருப்தியில் ஆளும் லிபரல் கட்சி
அடுத்த செய்தி வன்முறையிலிருந்து தப்பியோடும் கனேடியப்பெண்களுக்கு, சொந்த நாட்டுப் புகலிடங்களில் இடம் மறுக்கப்படும் அவலம்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடா

கனடா தேசிய இனப் பத்திரிகை மற்றும் ஊடக சபையின் விருது விழா

டிசம்பர் 15, 2025
கனடாமுதன்மை செய்தி

பழங்குடியின மக்கள் அரசிடம் கையேந்தி நிற்கிறார்கள் – ஒன்ராறியோ மாகாண முதல்வர் டக் ஃபோர்ட்

ஜூன் 19, 2025
கனடாமுதன்மை செய்தி

பயணிகளுக்கு 10 மில்லியன் டொலருக்கும் அதிகமான தொகையை செலுத்தவுள்ளது ஏயார் கனடா!

ஏப்ரல் 23, 2025
கனடாமுதன்மை செய்தி

கனடாவின் சஸ்காட்செவனில் தீவிரமடையும் காட்டுத்தீ

ஜூன் 6, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?