இந்தியப் பிரஜை ஒருவர் கனடாவில் கொலை செய்யப்பட்டுள்ளார்
கனடாவின் ராக்லேண்ட் பகுதியில் இந்தியர் ஒருவர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை அந்த நாட்டுக் காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.