இலங்கை வனவிலங்கு மற்றும் இயற்கை பாதுகாப்பு சங்கமும் கிளி /முக்கொம்பன் மகா வித்தியாலயமும் இணைந்து நடாத்திய சர்வதேச காடுகள் தினம் இன்றைய தினம் சனிக்கிழமை பாடசாலையின் அதிபர் ப.ஜோயல் பியசீலன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
சர்வதேச காடுகள் தினத்திணை முன்னிட்டு இலங்கை வனவிலங்கு மற்றும் இயற்கை பாதுகாப்பு சங்கத்தினல் மாணவர்கள் மத்தியில் பல்வேறு போட்டி நிகழ்வுகள் நடத்தி, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டது.
மேலும், மாணவர்களால் காடுகள் பற்றிய பல்வேறு கலைநிகழ்வுகளும் இடம்பெற்றது.
இவ் நிகழ்வில் இலங்கை வனவிலங்கு மற்றும் இயற்கை பாதுகாப்பு சங்க பிரதிநிதிகள், கிளிநொச்சி மத்திய சுற்றாடல் அதிகாரசபை அதிகாரிகள் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பாடசாலை நலன் விரும்பிகள் கலந்து கொண்டனர்.