பிரதமர் மார்க் கார்னி இந்த வாரம், “தேசத்தைக் கட்டமைக்கும் திட்டங்களின்” இரண்டாவது கட்டத்தை அறிவிக்க உள்ளார்.
இந்த புதிய திட்டங்களின் பட்டியலில் முக்கிய கனிமங்களை வெட்டியெடுத்தல், இயற்கை எரிவாயு ஏற்றுமதி மற்றும் ஆர்க்டிக்கில் தூய எரிசக்தி ஆகியவற்றுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.
அரசாங்கத்தின் ஒரு பகுதியாகச் செயற்படும் பெரிய திட்டங்களுக்கான அலுவலகம் ஆனது, ஆறு முக்கியத் திட்டங்களைச் செயற்படுத்துவதற்குப் பரிந்துரை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த முயற்சி பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதையும், தேசிய பாதுகாப்பை மேம்படுத்துவதையும், அதிக பொருளாதார தாக்கம் மற்றும் பூர்வகுடி மக்களின் பங்கேற்பு கொண்ட திட்டங்களுக்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம் நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
