ஒட்டாவா பொதுச் சுகாதார சபை (BOH) அதிக நிதி வழங்குமாறு, ஒண்டாரியோ மாகாண அரசாங்கத்திடம் அவசரக் கோரிக்கை விடுத்துள்ளது.
வளர்ந்து வரும் நிதிப் பற்றாக்குறையினால், அடிப்படைப் பொதுச் சுகாதாரச் சேவைகளைப் பராமரிப்பதற்கான தனது திறனுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவதாக எச்சரித்துள்ளது.
மொத்த நிதிநிலை அறிக்கையில் அதிகரிப்பு இருந்தபோதிலும், ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு போன்ற காரணிகளால் ஒட்டாவா பொதுச் சுகாதார சபை, கிட்டத்தட்ட 4 மில்லியன் டொலர் நிதி நெருக்கடியை எதிர்கொள்கிறது என்று கூறப்படுகிறது.
இந்த உத்தேச நிதிநிலை அறிக்கை இன்று புதன்கிழமை ஒட்டாவா நகர சபையில் சமர்ப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
