டர்ஹாம் பிராந்திய காவல்துறையில் (DRPS) ‘நச்சுத்தன்மை வாய்ந்த அலுவலகப் பணிச்சூழல்’ நிலவுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்டாரியோ சிவிலியன் காவல்துறை ஆணையத்தின் (OCPC) பல ஆண்டு கால விசாரணையானது இதனைக் கண்டறிந்துள்ளது.
அலுவலர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட துன்புறுத்தல்களை கவனிப்பதற்கு உயர் அதிகாரிகள் தவறியுள்ளதாகவும், மனநல ஆதரவு கோரிய அதிகாரிகளுக்கு எதிராக தீவிரமாகச் செயல்பட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த அமைப்புரீதியான பிரச்சினைகளைச் சரிசெய்யும் நோக்குடன், ஒன்டாரியோ சிவிலியன் காவல்துறை ஆணையத்தின் அறிக்கையில் 33 பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இருப்பினும், பொதுமக்களுக்கு வெளியிடுவதற்குப் பதிலாக, இந்த அறிக்கை காவல்துறை சேவை, காவல்துறை சபை மற்றும் சொலிசிட்டர் ஜெனரல் ஆகியோருக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
