பிராம்ப்டனில் தனது முன்னாள் பங்காளரைச் சுட்டுக் கொன்றதாகக் கூறப்படும் 38 வயது அந்தணி டெஷெப்பர் (Anthony Deschepper) என்பவர், நயாகரா நீர்வீழ்ச்சிப் பகுதியில், காவல்துறையினருடனான மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த சம்பவத்தின் போது அவருடன் இருந்த ஒரு 36 வயதுப் பெண், கொலைக்கு உடந்தையாக இருந்ததாகக் கருதி கைது செய்யப்பட்டுள்ளார்.
அந்த பெண் மீது தற்போது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அப்பெண், அந்தணி டெஷெப்பரின் தற்போதைய அல்லது முன்னாள் காதலியாக இருக்கலாம் எனக் காவல்துறை தெரிவித்துள்ளது.
ஒன்டாரியோவின் சிறப்புக் குற்றப் புலனாய்வுப் பிரிவு (Special Investigations Unit – SIU) இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து விசாரணை செய்து வருகிறது.
