மொண்ட்ரியலில் கடந்த வாரம் ஒரு பள்ளிப் பேருந்தில் ஏற்பட்ட தீ விபத்தைத் தொடர்ந்து, லயன் (LION) நிறுவனத்தின் மின்சாரப் பள்ளிப் பேருந்துகள் படிப்படியாக மீண்டும் சேவையில் ஈடுபடுத்தப்பட உள்ளன.
இருப்பினும், பாதுகாப்பு ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், திங்கட்கிழமை அன்று அனைத்துப் பேருந்துகளும் சேவையில் இருக்காது என சில பள்ளிச்சபைகள் பெற்றோர்களுக்கு அறிவித்தல் விடுத்துள்ளன.
லெஸ்டர் பி. பியர்சன் பள்ளிச்சபை (Lester B. Pearson School Board – LBPSB) மற்றும் ஆங்கில மொண்ட்ரியல் பள்ளி பள்ளிச்சபை (English Montreal School Board – EMSB) உள்ளிட்ட சில பள்ளிச்சபைகள், தங்களது வழித்தடங்களில் பேருந்துகள் இயங்காது எனத் தெரிவித்துள்ளன.
லெஸ்டர் பி. பியர்சன் பள்ளிச்சபை, பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் மாற்று ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
அதேபோல, ஆங்கில மொண்ட்ரியல் பள்ளிச்சபை, வழக்கமாக மின்சாரப் பேருந்தில் பயணிக்கும் மாணவர்களுக்கு திங்கட்கிழமை போக்குவரத்து சேவை இருக்காது என கூறியுள்ளது.
எனினும், டீசல் பேருந்துகள் வழக்கம் போல் இயங்கும் எனவும் அது குறிப்பிட்டுள்ளது.
