பிரதமர் மார்க் கார்னி, மொண்ட்ரியல் துறைமுக விரிவாக்கத் திட்டத்தை விரைவுபடுத்துவதற்காக, அது சார்ந்த செயற்பாடுகளை புதிதாக உருவாக்கப்பட்ட “பாரிய திட்டங்களுக்கான அலுவலகம்” (Major Projects Office – MPO) மூலம் முன்னெடுக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
இத்திட்டம், அரசின் ஐந்து முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்களில் ஒன்றாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
கொண்ட்ரெகோர் முனையத்தின் (Contrecœur Terminal) விரிவாக்கத் திட்டம், மொண்ட்ரியல் துறைமுகத்தின் கொள்கலன் கையாளும் திறனை 60 சதவீதம் அதிகரிக்கவுள்ளது.
மொண்ட்ரியல் துறைமுக அதிகாரசபையின் (Montreal Port Authority – MPA) கூற்றுப்படி, தற்போதுள்ள துறைமுகம் விரைவில் தனது முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளது.
இந்த விரிவாக்கத்தின் மூலம் கூடுதலாக 1.15 மில்லியன் கொள்கலன்களுக்கு துறைமுகத்தில் இடமளிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
