கனடாவின் பெரிய மளிகைக் கடை நிறுவனங்களில் ஒன்றான லோப்லா நிறுவனம், அமெரிக்காவின் வரிகளால் விலை உயர்ந்துள்ள பொருட்களின் எண்ணிக்கை விரைவில் கணிசமாக அதிகரிக்கும் என்று அறிவித்துள்ளது.
லோப்லாவின் தலைமைச் செயல் அதிகாரி பெர் பேங்க் (Per Bank) வெளியிட்ட ஓர் அறிக்கையில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
கனடாவின் பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) மற்றும் பிற தலைவர்கள் அமெரிக்க அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதைக் கண்டு மகிழ்ச்சி அடைவதாகவும், இந்த நிலைமை விரைவாக தீர்க்கப்படும் என்று நம்புவதாகவும் பெர் பேங்க் தெரிவித்தார்.
இதேபோல், அமெரிக்காவில் உள்ள வால்மார்ட் நிறுவனமும், விலை உயர்த்துதல் தொடர்பான தகவலை வெளியிட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் (Donald Trump) விதித்த கட்டணங்களால் செலவுகள் அதிகரித்துள்ளதாகவும், அதன் காரணமாக அமெரிக்காவில் உள்ள தனது கடைகளில் பொருட்களின் விலைகளை உயர்த்த வேண்டியுள்ளது என்றும் கூறியுள்ளது.
