இந்தியாவின் தாஜ்மஹால் உலக அதிசயங்களில் ஒன்றாகும். பிரபல சுற்றுலா தலமான தாஜ்மஹாலை பார்வையிட பலர் வருகை தருகின்றனர். இந்நிலையில் தாஜ்மஹாலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் அறிவித்துள்ளது.
குறித்த வெடிகுண்டு மிரட்டலானது உத்தரப்பிரதேச மாநிலத்தின் சுற்றுலாத்துறை அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலம் வந்துள்ளது.
இதன் காரணமாக தாஜ்மஹால் நுழைவு வாயில் மூடப்பட்டு சுற்றுலாப் பயணிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.
பின்னர் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் காவல்துறையினர் மோப்ப நாயின் உதவியுடன் அனைத்து இடங்களிலும் சோதனை நடத்தினர்.
சோதனை முடிவில், வெடி குண்டுகள் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை.
இந்நிலையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் யார்? என்பது குறித்து காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.