Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்கனடா

அல்பெர்ட்டா பிரிவதைத் தடுக்கச் சுற்றுச்சூழல் விதிகளில் சலுகைகள்! – அதிருப்தியில் ஆளும் லிபரல் கட்சி

மே 22, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கனடாவை மேலும் வலிமையான நாடாக மாற்றுவதற்கு அல்பெர்ட்டா (Alberta) மாகாணம் மிகவும் இன்றியமையாதது என்று, பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) தெரிவித்துள்ளார். அல்பெர்ட்டா மாகாணம் கனடாவை விட்டுப் பிரிவது குறித்து இந்த ஆண்டு ஒக்டோபரில் பொதுமக்களிடம் கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று, அந்த மாகாணத்தின் முதல்வர் டேனியல் ஸ்மித் அறிவித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து, நாட்டின் ஒருமைப்பாட்டை வலியுறுத்தியே, பிரதமர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். அண்மைய வர்த்தக உடன்பாடுகள் மற்றும் ஒத்துழைப்புகள் மூலம் அல்பெர்ட்டா மக்களின் தேவைகளை மத்திய அரசு நிறைவேற்றி வருவதாகத் தெரிவித்த பிரதமர் மார்க் கார்னி, எனவே அல்பெர்ட்டா மாகாணம் பிரிந்து செல்வதற்கான அவசியம் இல்லை என்று சுட்டிக்காட்டினார்.

ஈரான் பிராந்திய மோதல்களால் உலகளவில் ஏற்பட்டுள்ள எரிசக்தி நெருக்கடியை (Energy Crisis) நிவர்த்தி செய்வதற்கு, அல்பெர்ட்டாவின் எண்ணெய் வளம் கனடாவுக்கு மிகவும் தேவைப்படுவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.

இதேவேளை, கனடாவிலிருந்து அல்பேர்ட்டா பிரிந்து தனி நாடாகுவதைத் தடுப்பதற்காக, பிரதமர் கார்னி சுற்றுச்சூழல் விதிகளில் பல சலுகைகளை அந்த மாகாணத்துக்கு வழங்கியிருக்கின்றமை, அவரது சொந்தக் கட்சிக்குள்ளேயே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ஆளும் லிபரல் கட்சியின் 14 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த விவகாரம் தொடர்பில் பிரதமருக்கு விசேட கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர். அல்பெர்ட்டாவுடனான ஒப்பந்தத்திற்காகச் சுற்றுச்சூழல் இலக்குகளைக் கைவிடுவது மத்திய அரசாங்கத்தின் நம்பகத்தன்மையைக் கடுமையாகப் பாதிக்கும் என்று அவர்கள் அக்கடிதத்தில், எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி மொன்றியலின் மில்டன்-பார்க் பகுதியில் மறுவாழ்வு மையங்களுக்காக போதைப்பொருள் பயனாளிகள் பல மாதங்கள் காத்திருப்பு!
அடுத்த செய்தி கனடாவின் சர்வதேச விமான சேவை தாமதங்களுக்கு CBSA கணினி வலையமைப்பில் ஏற்பட்ட திடீர் செயலிழப்புதான் காரணமா?

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

கொத்மலை பேரூந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்வு

மே 14, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யாழ்.பல்கலை கறுப்பு கொடி விவகாரம் – மாணவர்கள் போராட்டம்

மார்ச் 19, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

தமிழரசு கட்சியின் அரசியற்குழு கூட்டம்

ஆகஸ்ட் 2, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

எல்லை தாண்டி மீன் பிடிக்க வேண்டாம் – கடற்றொழில் அமைச்சர்

மார்ச் 5, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?