மொன்றியல் நகரில் வீதிகளில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத அளவிலான குழிகளைச் சீரமைக்க நவீன இயந்திரங்கள் எதுவும் இல்லாததால், தொழிலாளர்கள் கைகளால் குழிகளை மூடும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
மொன்றியல் மாநகர சபையிடம் இருந்த நான்கு ‘பைதான் 5000’ (Python 5000) ரக நவீன இயந்திரங்களும் தற்போது பழுதடைந்துள்ளன.
ஒரு இயந்திரம் ஒரு நாளைக்கு 300 குழிகள் வரை சீரமைக்கும் திறன் கொண்டது.
ஆனால் தற்போது இந்த இயந்திரங்கல் அனைத்தும் பழுதடைந்துள்ளதால், வீதி பராமரிப்புப் பணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மேயர் சொரயா மார்டினெஸ் பெர்ராடா (Soraya Martinez Ferrada) புதிய இயந்திரங்களை வாங்குவதற்கு டெண்டர் நடைமுறைகள் காரணமாக சுமார் ஓராண்டு காலம் வரை ஆகலாம் எனவும் இந்த விடயத்தில் மொன்றியல் மக்கள் பொறுமை காக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
மொன்றியல் நகரில் வீதிகளில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வீதிக் குழிகளின் எண்ணிக்கை 26 சதவீதம் அதிகரித்துள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் இயந்திர பராமரிப்பு ஒப்பந்தம் புதுப்பிக்கப்படாததே இந்த நெருக்கடிக்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.
