மொன்றியலில் புதிய வீடுகளை வாடகைக்கு எடுக்க விரும்பும் குத்தகைதாரர்கள் இந்த மார்ச் மாதத்தில் மற்றொரு விலை உயர்வை எதிர்கொள்கின்றனர். ஒரு படுக்கையறை கொண்ட நிறைவு செய்யாத அடுக்குமாடி குடியிருப்பின் சராசரி விலை இப்போது மாதத்திற்கு $1,769 ஆக உள்ளது, இது கடந்த மாதத்தை விட 1.3% அதிகமாகும், மேலும் கடந்த ஆண்டை விட $151 அதிகமாக செலுத்த வேண்டியுள்ளது.
இந்த புள்ளி விவரங்கள் Liv.rent இன் சமீபத்திய சந்தை அறிக்கையிலிருந்து பெறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது, இது அந்த தளத்தில் கிடைக்கபெட்ரா பட்டியல்களிலிருந்து வாடகைத் தரவையும் பிற பிரபலமான வாடகை தளங்களிலிருந்து முறையாக சேகரிக்கப்பட்ட தரவையும் தொகுத்து பெறப்பட்டுள்ளது . Liv.rent இன் மார்ச் அறிக்கையானது, $5,000 க்கு மேல் வாடகை அரவிடப்படுகின்ற ஆடம்பர வாடகைகள் மற்றும் பகிரப்பட்ட தங்குமிடங்களைத் தவிர்த்து பகுப்பாய்வு செய்ததரவு என்பது கவனிக்கப்பட்டது.
இருப்பினும், அனைத்து சுற்றுப்புறங்களும் ஒரே மாதிரியான வாடகை அதிகரிப்பு காணப்படவில்லை. வெஸ்ட்மவுண்டில் மிகப்பெரிய அதிகரிப்பு இருந்தது, புதிய புனரமைப்பு செய்யப்படாத ஒரு படுக்கையறை வாடகை மாதத்திற்கு 11.5% அதிகரித்து $2,044 ஆக உயர்ந்து, நகரத்தின் மிகவும் விலையுயர்ந்த பகுதியாக இது அமைந்தது. மறுபுறம், அஹுன்ட்சிக்-கார்டியர்வில் மிகப்பெரிய வாடகை சரிவைக் கண்டுள்ளது, வாடகை மாதத்திற்கு 9.6% குறைந்து $1,498 ஆக இருந்து வருகின்றது இது நகரில் ஏனைய நகரங்களுடன் ஒப்புடும் போது மிகக் குறைவாக காணப்படுவது குறிப்பிடத்தக்கது.