Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2025 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்உலகம்

தென்மேற்கு பாகிஸ்தானின்ரயில் கடத்தல் -பணையக் கைதிகள் அனைவரும் மீட்பு..!!

மார்ச் 13, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

தென்மேற்கு பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குவெட்டாவிலிருந்து, கைபர் பக்துன்க்வாவில் உள்ள பெஷாவருக்கு ஒன்பது பெட்டிகளில் சுமார் 440 பயணிகளுடன் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் நேற்று முன்தினம் காலை புறப்படது. ரயில் சென்று கொண்டிருந்தபோது, ​​கிளர்ச்சியாளர்கள் தண்டவாளத்தில் வெடிப்பொருளை வைத்து வெடிக்க செய்தனர்.

இதனால் ரயில் தடம் புரண்டது. தொடர்ந்து ரயிலை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர். தொடர்ந்து ரயிலில் ஏறிய கிளர்ச்சியாளர்கள் அதில் இருந்த பாதுகாப்புப் படை வீரர்கள் உள்பட 450  பயணிகளைப் பிணைக் கைதிகளாகப் பிடித்தனர். பின்னர் பொதுமக்களை விடுவித்து ராணுவ வீரர்கள் உட்பட 182 பேரை சிறைபிடித்தனர். ரயில்மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பலூச் விடுதலைப் படை பொறுப்பேற்றது.

இதில் 20 ராணுவ வீரர்களை கொன்றதாகவும் அவர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து பயணிகளை மீட்கும் பணியில் அந்நாட்டு ராணுவம் மற்றும் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் பணையக்கைதிகள் அனைவரும் மீட்கப்பட்டதாக பாகிஸ்தான் ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

நேற்று பயங்கரவாதிகள் அனைவரும் கொல்லப்பட்டு, பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். இதன்மூலம் ஆயுதப்படைகள் வெற்றிகரமாக நடவடிக்கையை முடித்தன என இராணுவ செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் ஜெனரல் அகமது ஷெரீப் தெரிவித்தார். தாக்குதலில் ஈடுபட்ட 33 தீவிரவாதிகளை பாதுகாப்புப் படையினர் கொன்றனர். இருப்பினும், 21 பயணிகளும் நான்கு துணை ராணுவ வீரர்களும் உயிரிழந்தனர் எனவும் தெரிவித்தார்.

மேலும் தாக்குதலின் போதும் ரயிலில் பயணம் செய்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் 27 பேரும், பணியில் இருந்த ராணுவ வீரர் ஒருவரும் கொல்லப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

முந்தைய செய்தி மொன்றியலில் அதிகரித்து செல்லும் வீட்டு வாடகை..!!
அடுத்த செய்தி ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலத்தில் திடீரென ஏற்பட்ட கோளாறு – சுனிதா வில்லியம்ஸ் பூமி திரும்புவதில் தொடரும் சிக்கல்..!!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

வவுனியா மாநகரசபைக்கு புதிய ஆணையாளர் நியமனம்

ஜூலை 17, 2025
உலகம்

ரஷ்யாவின் கியேவ் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமைதி ஒப்பந்த பேச்சுவார்தை!

ஆகஸ்ட் 17, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

திருக்கோணமலை மாவட்ட மாநகர சபை முதல்வராக இருவர் தெரிவு

ஜூன் 23, 2025
உலகம்

லண்டனில் தமிழீழ தேசியக் கொடி நாள்

நவம்பர் 24, 2025
Follow US
© 2025 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?