வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டத்தின் 28 வது ஆண்டு நிறைவு விழாவும் மாருதம் சஞ்சிகை வெளியீடும் இன்று வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்க மண்டபத்தில் இடம்பெற்றது.
தமிழறிஞர் கலாநிதி தமிழ்மணி அகளங்கள் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பல்வேறு கலை கலாசார நிகழ்வுகள் இடம் பெற்றதோடு சாதனையாளர் கௌரவிப்பும் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வவுனியா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் த. மங்களேஸ்வரன் கலந்து கொண்டதோடு மாருதம் சஞ்சிகையின் அட்டைப்படத்தை இம்முறை அலங்கரித்த யாழ் பல்கலைக்கழக ஆங்கிலத்துறை விரிவுரையாளர் பேராசிரியர் ஸ்ரீ கணேஷன் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.