Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்உலகம்

ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலத்தில் திடீரென ஏற்பட்ட கோளாறு – சுனிதா வில்லியம்ஸ் பூமி திரும்புவதில் தொடரும் சிக்கல்..!!

மார்ச் 13, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா (NASA) சார்பில், போயிங் ஸ்டார்லைனர் ராக்கெட் மூலம் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த 2024ஆம் ஆண்டு ஜூன் 5ஆம் தேதி சர்வதேச விண்வெளி மையத்திற்குச் சென்றனர். இந்த ஆய்வு திட்டத்தின் படி ஆய்வு நடத்திவிட்டு, ஜூன் 14ம் தேதி பூமிக்குத் திரும்பும் வகையில் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், இவர்கள் பயணித்த ஸ்டார்லைனர் விண்கலத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக இருவரும் சர்வதேச விண்வெளி மையத்தில் இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

சுமார் 6 மாதங்களுக்கும் மேலாக இருவரும் விண்வெளியில் தங்கி இருக்கின்றனர். கடந்த பிப்ரவரி மாதம் இருவரும் பூமிக்குத் திரும்புவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. அவர்களை மீட்க தொடர் முயற்சிகள் மேற்கொண்ட போதிலும் எந்த பலனும் அளிக்காமல் போனது. இதன் காரணமாக, விண்வெளி மையத்தில் சிக்கியிருக்கும் அவர்களை அழைத்து வர எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் உதவியை நாசா நாடியது. இதையடுத்து, மீட்பு பணிகள் தீவிரமடைந்தன. சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர், ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலத்தின் மூலம் வரும் மார்ச் 16ஆம் தேதி அழைத்து வரப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், சுனிதா வில்லியம்ஸ் பூமி திரும்புவதில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை ஸ்பேஸ் எக்ஸ் – டிராகன் – ‘க்ரூ’ 10 எனும் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்த ஹைட்ராலிக் இயந்திரத்தில் திடீரென்று தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, ஸ்பேஸ் எக்ஸ்- டிராகன்- ‘க்ரூ’ 10 திட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த கோளாறை சரிசெய்யும் பணியில் விண்வெளி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டால் இந்திய நேரப்படி நாளை (14-03-25) அதிகாலை 4.56 மணிக்கு ராக்கெட்டை விண்ணில் செலுத்த வாய்ப்பு உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.

முந்தைய செய்தி தென்மேற்கு பாகிஸ்தானின்ரயில் கடத்தல் -பணையக் கைதிகள் அனைவரும் மீட்பு..!!
அடுத்த செய்தி வான்கூவரில் 2 வயது குழந்தை காணாமல் போனது குறித்து ஆம்பர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்கியூபெக்

கியூபெக் வரலாற்றிலேயே மிகப்பெரிய ’தரவுத் திருட்டு’ வழக்கின் முக்கிய சூத்திரதாரி, மெக்ஸிகோவில் கைது!

ஜூலை 17, 2026
உலகம்

அமெரிக்காவின் மிச்சிகனில் விமான விபத்து -மூன்று பேர் பலி!

அக்டோபர் 17, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

கிளிநொச்சி மாவட்டம்- பூநகரி பிரதேச சபை தேர்தல் முடிவுகள்

மே 6, 2025
அண்மைய செய்திகள்விளையாட்டு

தொடர் தோல்விகள் – இறுதி இடத்திற்கு தள்ளப்பட்டது சென்னை அணி

ஏப்ரல் 13, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?