Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
உலகம்

ஓமன் வளைகுடாவில் வெளிநாட்டுக் கப்பலை அதிரடியாகப் பறிமுதல் செய்தது ஈரானியப் படை

மே 8, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

ஈரானின் எண்ணெய் ஏற்றுமதிக்கு இடையூறு விளைவிக்க முயன்றதாகக் கூறி, ஓஷன் கோய் (Ocean Koi) என்ற எண்ணெய்க் கப்பலை ஈரானிய கடற்படையினர் ஓமன் வளைகுடாவில் வைத்து இன்று பறிமுதல் செய்துள்ளனர்.

இன்று அதிகாலை நடைபெற்ற ஒரு சிறப்பு நடவடிக்கையில் ஈரானின் புரட்சிகர காவல் படையின் (IRGC) கமாண்டோக்கள் பார்படாஸ் நாட்டுக்கொடியுடன் வந்த ஓஷன் கோய் கப்பலுக்குள் அதிரடியாக நுழைந்து அதனைக் கைப்பற்றினர்.

ஈரானின் தேசிய நலன்களுக்கும், அதன் எண்ணெய் ஏற்றுமதிக்கும் இந்தக் கப்பல் அச்சுறுத்தலாக இருந்ததாக அந்நாட்டு அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஈரானின் இந்தப் பறிமுதல் நடவடிக்கை, வளைகுடா பிராந்தியத்தில் ஏற்கனவே நிலவி வரும் போர் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது. நள்ளிரவில் ஈரானிய கமாண்டோக்கள் ஆயுதங்களுடன் கப்பலுக்குள் ஏறி, அங்கு ஈரானியக் கொடியை ஏற்றும் வீடியோ காட்சிகளை அரசுத் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.

இந்தக் கப்பல் ஈரானிய எண்ணெயைச் சுமந்து சென்ற போதிலும், பிராந்திய சூழலைப் பயன்படுத்தி ஈரானின் வர்த்தகத்தைச் சீர்குலைக்க முயன்றதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.

தற்போது இந்தக் கப்பல் ஈரானின் தெற்கு கடற்கரைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்தக் கப்பல் ஷாங்காயைச் சேர்ந்த ஒரு நிறுவனத்தால் நிர்வகிக்கப்படுகிறது.

முன்னதாக, ஈரானின் நிழல் கப்பல் (Shadow Fleet) எனக்கூறி, அமெரிக்காவால் இந்தக் கப்பல் மீது தடைகள் விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில வாரங்களாக ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே கடுமையான மோதல்கள் நடைபெற்று வருகின்றன. இன்று காலை கூட இரு நாட்டுப் படைகளுக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முந்தைய செய்தி ஆட்சி அமைப்பதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஆதரவை நாடிய விஜய்
அடுத்த செய்தி வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை தவிசாளர் வாடகை வாகனம் பயன்படுத்திய விவகாரத்தினால் சர்ச்சை

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

உலகம்

லொஸ் ஏஞ்சல்ஸ் பொலிஸ் நிலையத்தில் ஏற்பட்ட வெடி விபத்து – மூவர் உயிரிழப்பு!

ஜூலை 19, 2025
உலகம்

மலேசிய விமானத்தை தேடும் புதிய முயற்சிக்கு அந்நாட்டு அரசு ஒப்புதல்.

டிசம்பர் 21, 2024
அண்மைய செய்திகள்உலகம்

இந்தோனேசியாவிலுள்ள எரிமலை வெடிப்பு – 4 நிலநடுக்கங்கள் பதிவு

பிப்ரவரி 18, 2026
உலகம்விசேட செய்திகள்

ஈரான் 19 குறுகிய தூர மற்றும் நடுத்தர தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை அல் உதெய்ட் விமான தளத்தை நோக்கி ஏவியது.

ஜூன் 23, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?