கியூபெக் மாகாணத்தின் சுகாதாரத் துறையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் டிஜிட்டல் சுகாதார சாதனை (DSN) திட்டம் வரும் மே மாதம் 9 ஆம் திகதி அறிமுகப்படுத்தப்படவுள்ளது. தொலைபேசித் தகவல்கள், காகிதக் கோப்புகள் மற்றும் ஃபேக்ஸ் (Fax) முறைகளை ஒழித்து, நோயாளிகளின் அனைத்து விபரங்களையும் ஒரே டிஜிட்டல் தளத்தில் கொண்டு வருவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
இந்தத் திட்டத்தின் ஆரம்பக் கட்டத்தில் ஏற்படக்கூடிய சிக்கல்களைச் சமாளிக்க, அடுத்த நான்கு வாரங்களுக்கு சில மருத்துவச் சேவைகள் குறைக்கப்படும் என சாந்தே கியூபெக் (Santé Québec) நிறுவனம் அறிவித்துள்ளது.
புதிய மென்பொருளை ஊழியர்கள் பழகிக்கொள்வதற்காக, அவசரமற்ற அறுவை சிகிச்சைகள் மற்றும் பரிசோதனைகள் தற்காலிகமாகக் குறைக்கப்படவுள்ளன.
குறிப்பாக, வடக்கு மொன்றியல் மற்றும் மொரிசி (Mauricie) பகுதிகளில் அடுத்த வாரம் முதல் மருத்துவப் பணிகள் 25 சதவீதமாகக் குறைக்கப்பட்டு, மே மாதம் 25 ஆம் திகதிக்குப் பின்னரே இயல்பு நிலைக்குத் திரும்பும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, புற்றுநோய் சிகிச்சை மற்றும் அவசரக் கால அறுவை சிகிச்சைகள் எவ்விதத் தடையுமின்றித் தொடரும் என அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.

