கியூபெக் ஆளும் கட்சியான CAQ-இல் இருந்து முன்னாள் அமைச்சர் கில்லஸ் பெலாஞ்சர் (Gilles Bélanger) விலகியுள்ளார். புதிய அமைச்சரவையில் தமக்கு இடம் வழங்கப்படாததைக் கண்டித்து, அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரியவருகிறது.
கியூபெக் மாகாணத்தின் ஒர்ஃபோர்ட் (Orford) தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான பெலாஞ்சர், கியூபெக் இணையப் பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் விவகார அமைச்சராகப் பணியாற்றி வந்தார்.
புதிய முதலமைச்சர் கிறிஸ்டின் ஃப்ரெச்செட் (Christine Fréchette) பதவியேற்றபோது, கில்லஸ் பெலாஞ்சர் (Gilles Bélanger) அவருக்கு முதலில் ஆதரவு தெரிவித்தவராக அறியப்பட்டார்.
ஆனால், நேற்று அறிவிக்கப்பட்ட புதிய அமைச்சரவையில் பெலாஞ்சர் நீக்கப்பட்டு, அவருக்குப் பதில் பிரான்ஸ்-எலைன் துரான்சோ அமைச்சராக நியமிக்கப்பட்டமை, ஆளும் தரப்புக்குள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பெலாஞ்சரின் விலகல் ஆனது கியூபெக்கை ஆளும் தரப்பான CAQ கட்சிக்கு ஒரு பின்னடைவாகக் கருதப்படுகிறது.
