கியூபெக்கின் புதிய முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கிறிஸ்டின் ஃப்ரெச்செட் (Christine Fréchette), இன்று தனது அமைச்சரவையின் முக்கிய மாற்றங்கள் மற்றும் கொள்கை முடிவுகள் குறித்த முதல் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், “அரசியல் ஸ்திரத்தன்மை” (Stability) மற்றும் “பொருளாதார வளர்ச்சி” ஆகியவற்றை இலக்காகக் கொண்டு தனது புதிய பயணத்தை அவர் தொடங்கியுள்ளார்.
கட்சிக்குள் பிளவுகள் ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில், தலைமைப் போட்டியில் தனக்கு எதிராகப் போட்டியிட்ட பெர்னார்ட் டிரைன்வில்லை (Bernard Drainville) துணை முதல்வராக ஃப்ரெச்செட் நியமித்துள்ளார்.
பெர்னார்ட் டிரைன்வில் தொடர்ந்து கல்வி அமைச்சராகப் பணியாற்றுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், சுகாதாரத் துறையில் சீர்திருத்தங்களை மேற்கொண்டு வரும் கிறிஸ்டியன் துபே (Christian Dubé) தொடர்ந்தும் சுகாதார அமைச்சராக நீடிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தனது முந்தைய பொறுப்பான ‘பொருளாதார மற்றும் எரிசக்தி’ அமைச்சகத்தை இப்போதைக்குத் தனது கட்டுப்பாட்டிலேயே வைத்துக்கொள்வதற்கு, ஃப்ரெச்செட் தீர்மானித்துள்ளார்.
வீட்டு வசதி, வாழ்க்கைச் செலவு, எரிசக்திப் பாதுகாப்பு முதலான மக்களின் மூன்று முக்கிய பிரச்சினைகளுக்கு, அடுத்த ஆறு மாதங்களில் தீர்வு காணப்போவதாக, கியூபெக்கின் புதிய முதல்வர் கிறிஸ்டின் ஃப்ரெச்செட் (Christine Fréchette) உறுதியளித்துள்ளார்.
