மொன்றியல் பிராந்தியத்தில் உள்ள தனது மூன்றாவது கிளையையும் இந்த கோடை காலத்தில் மூடப்போவதாக வால்மார்ட் கனடா நிறுவனம் அதிரடியாக அறிவித்துள்ளது.
ஏற்கனவே கோட்-டெஸ்-நெய்ஜஸ் (Côte-des-Neiges) மற்றும் பொயிண்ட்-ஓ-ட்ரெம்ப்ளஸ் (Pointe-aux-Trembles) கிளைகளை மூடுவதாக அந்த நிறுவனம் அறிவித்திருந்தது.
அதனைத் தொடர்ந்து, இப்போது டோர்வல் (Dorval) கிளையையும் மூட நிறுவனம் தீர்மானித்துள்ளது.
நுகர்வோரின் மாறிவரும் தேவைகளுக்கு ஏற்ப தனது வணிகத்தை மறுசீரமைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வால்மார்ட் கனடா நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த மூன்று கிளைகளிலும் பணியாற்றும் நூற்றுக்கணக்கான ஊழியர்களுக்கு, அருகிலுள்ள வேறு வால்மார்ட் கிளைகளில் மாற்றுப் பணிகள் வழங்கப்படும் என நிறுவனம் உறுதியளித்துள்ளது.
சில கிளைகள் மூடப்பட்டாலும், கியூபெக் மாகாணத்தில் தனது சேவையை மேம்படுத்த 150 மில்லியன் டொலர் நிதியை வால்மார்ட் முதலீடு செய்யவுள்ளமை குறிப்பிடத் தக்கது.
