மொன்றியல் நகரில் பெய்து வரும் தொடர் மழை மற்றும் வசந்த கால பனி உருகல் காரணமாக, கியூபெக் மாகாண அரசு, வெள்ள அபாய எச்சரிக்கையை அதன் உச்சக்கட்ட நிலையான ‘லெவல் 3’ (Level 3) இற்கு உயர்த்தியுள்ளது.
மாகாணத்தின் மேற்குப் பகுதி மற்றும் ஆற்றோரக் குடியிருப்புகளில் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதால், மொன்றியல் மாநகர சபை இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது.
பியர்ஃபாண்ட்ஸ்-ரொக்ஸ்போரோ (Pierrefonds-Roxboro) மற்றும் செயின்ட்-ஆன்-டி-பெல்லுவ் (Sainte-Anne-de-Bellevue) போன்ற பகுதிகளில் ஆயிரக்கணக்கான மணல் மூட்டைகள் மற்றும் தற்காலிகத் தடுப்புச் சுவர்கள் அமைக்கப்பட்டுள்ளன.
நேற்று மாலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் மொன்றியல் மேயர் சொரயா மார்டினெஸ் ஃபெர்ராடா (Soraya Martinez Ferrada) பேசுகையில், “மக்களின் பாதுகாப்பே எமது முதன்மை முன்னுரிமை” எனத் தெரிவித்தார்.
எதிர்வரும் நாட்களில் மொன்றியல் நகரில் சுமார் 70 மில்லிமீற்றர் வரையான பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
