மொன்றியல் நகரில் வார இறுதிப் பராமரிப்புப் பணிகள் காரணமாகப் பிரதான போக்குவரத்துப் பாதைகள் மூடப்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் பாரிய சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். குறிப்பாக நகரின் மையப்பகுதியை இணைக்கும் வில்-மேரி சுரங்கப்பாதை (Ville-Marie Tunnel) மற்றும் முக்கிய பாலங்கள் திங்கட்கிழமை காலை வரை மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வில்-மேரி மற்றும் விகர் (Viger) சுரங்கப்பாதைகளில் மேற்கொள்ளப்படும் கான்கிரீட் மற்றும் மேம்பாலச் சீரமைப்புப் பணிகள் காரணமாக Route 136 நெடுஞ்சாலை இரு திசைகளிலும் மூடப்பட்டுள்ளது. பானெட் வீதிக்கும் (Panet St) லூசியன்-எல் அலியர் (Lucien-LAllier) நுழைவுப் பாதைக்கும் இடைப்பட்ட பகுதி மூடப்பட்டுள்ளது.
இப்பாதையூடாகச் செல்லும் வாகனங்கள் விகர் அவென்யூ (Viger Ave) வழியாகத் திருப்பி விடப்பட்டுள்ளன. இதேவேளை, வீதிப் போக்குவரத்து மட்டுமன்றி, REM ரயில் சேவையும் பராமரிப்புப் பணிகள் காரணமாகச் சனி மற்றும்ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 7:30 மணிக்குப் பின்னரே தனது சேவையைத் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
