மெக்சிகோ, கனடா மற்றும் சீனா ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது விதிக்கப்பட்ட வரியானது இன்று முதல் அமுலுக்கு வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதன் காரணமாக அமெரிக்கப் பங்குச் சந்தையானது பாரியளவு வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாகப் பதவியேற்றதைத் தொடர்ந்து மெக்சிகோ, கனடா மற்றும் சீனா ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீதான வரியை அதிகரித்தார்.
இதன்படி, மெக்சிகோ மற்றும் கனடா ஆகிய நாடுகளின் பொருட்களுக்கு 25 சதவீதமும், சீனாவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 10 சதவீதமும் வரி அதிகரிக்கப்பட்டது.
அதேபோன்றே ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கும் வரி அதிகரிப்பு மேற்கொள்ளப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குறிப்பிட்டிருந்தார். இருப்பினும் இந்த நிலைமையானது வட அமெரிக்கப் பொருளாதாரத்திற்குக் கடுமையான பின்னடைவை ஏற்படுத்தும் எனத் தலைமை நிர்வாக அதிகாரிகள் மற்றும் பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.