Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

அமெரிக்காவின் இறக்குமதி பொருட்களுக்கு கனடாவில் இனி அதிக வரி!

மார்ச் 4, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கனடாவில் இறக்குமதியாகும் அமெரிக்க பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும் நடவடிக்கை, கனடா நேரப்படி, செவ்வாய்க்கிழமை(மார்ச் 4) நள்ளிரவு 12.01 மணியிலிருந்து அமுலுக்கு வரவிருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவுக்குள் சட்டவிரோத அகதிகள் மற்றும் போதைப் பொருட்கள் வருவதைத் தடுப்பதற்காக கனடா, மெக்ஸிகோ ஆகிய நாடுகள் மீது கூடுதலாக 25 சதவீத இறக்குமதி வரியும் சீனா மீது 10 சதவீத வரியும் விதிக்கவிருப்பதாக அமெரிக்காவின் அடுத்த அதிபராகத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளாா்.

இதனையடுத்து, டிரம்ப் அமெரிக்க அதிபரானதும் கொண்டுவந்துள்ள வரி விதிப்பு நடவடிக்கையின்படி, கனடாவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு அமெரிக்கா எவ்வளவு வரி விதிக்கிறதோ அதே அளவுக்கு கனடாவும் அமெரிக்க பொருட்களுக்கு வரி விதித்துள்ளது.

அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் 2,000 கோடி டாலா் (சுமாா் ரூ.1.74 லட்சம் கோடி) மதிப்பிலான புகையிலைப் பொருள், காய்கறிகள், வீட்டு உபயோகப் பொருட்கள், ஆயுதங்கள், ராணுவம் சாா்ந்த பொருட்களுக்கு கூடுதலாக 25 சதவீதம் விதிப்பதாக கனடா கடந்த மாதம் அறிவித்தது.

மேலும், 8,600 கோடி டாலா் (ரூ.7.48 லட்சம் கோடி) மதிப்பிலான அமெரிக்க பொருட்களுக்கு கூடுதல் இறக்குமதி வரி விதிக்கப்போவதாகவும் கனடா அறிவித்துள்ளது.

இந்த நிலையில், இது குறித்து, கனடா பிரதமர் கூறியிருப்பதாவது:

“அமெரிக்கா விதித்துள்ள கூடுதல் வரி விதிப்பு நடவடிக்கை நள்ளிரவிலிருந்து அமுலாவதைத் தொடர்ந்து, கனடாவும் பதிலடி நடவடிக்கையாக, கனடாவில் இறக்குமதியாகும் 155 பில்லியன் டாலர் அமெரிக்க பொருட்களுக்கு 25 சதவிகித வரி விதிப்பு நடவடிக்கையை (கனடா நேரப்படி)மார்ச் 4 நள்ளிரவு 12.01 மணிமுதல் அமுல்படுத்தும்” என்று கூறியுள்ளார்.

முந்தைய செய்தி இறக்குமதி பொருள்கள் மீதான வரி விதிப்புகளை ட்ரம்ப் உறுதிப்படுத்தியதால் பங்கு சந்தைகள் சரிவு.
அடுத்த செய்தி யாழ். பல்கலை முன் போராட்டம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

Uncategorizedகனடா

கனடா பொருளாதாரத்தை மறுசீரமைக்க சிறிது காலம் தேவை – பிரதமர் மார்க் கார்னி

அக்டோபர் 23, 2025
கனடாமுதன்மை செய்தி

ஒன்டாரியோவின் முதல்வரின் அரசாங்கம், விவாதம் கடுமையென விமர்சனம்!

நவம்பர் 6, 2025
கியூபெக்முதன்மை செய்தி

 அவசர நேரங்களில் (Rush Hour) மட்டுமே இயக்கப்படும் மொன்றியலின் பேருந்து மற்றும் மெட்ரோ ரயில் சேவைகள்!

அக்டோபர் 31, 2025
கியூபெக்முதன்மை செய்தி

செயின்ட் லொரன்ஸ் ஆற்றின் வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் கடும் புயல் தாக்கம்

ஏப்ரல் 30, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?