நாடாளாவிய ரீதியில் அரச பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பல்கலைக்கழக ஊழியர்கள் முன்னெடுத்த போராட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினால் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பிரதான நுழைவாயிலில் மதியம் 12 மணி முதல் 1 மணி வரையில் பல்கலைக்கழக ஊழியர்கள் குறித்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சம்பளத்தை பொய்யாக உயர்த்தாதே, பதவி வெற்றிடங்களை உடனடியாக நிரப்பு, இடமாற்ற விண்ணப்பங்களுக்கு நடவடிக்கை எடு, பொதுச் சேவைக்கு 64%, எங்களுக்கு 58% நீதியா!, OT வீதத்தை மாற்றாதே, MCA குறைப்பை நிறுத்து போன்ற கோஷங்கள் போராட்டக்காரர்களால் எழுப்பபட்டன.