பிரதமர் மார்க் கார்னி தனது முதல் செய்தியாளர் சந்திப்பை ஒட்டாவாவில் நடத்தவுள்ளார்.
திங்கள்கிழமை நடைபெற்ற பொதுத்தேர்தலில் லிபரல் கட்சி வெற்றி பெற்றதை முன்னிட்டு, இந்த செய்தியாளர் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு இந்த செய்தியாளர் சந்திப்பு ஆரம்பமாகவுள்ளது.
இதன்போது, தனது அரசாங்கத்தின் ஆரம்ப முன்னுரிமைகள் குறித்து பிரதமர் மார்க் கார்னி விளக்கமளிப்பார் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை சந்திப்பது குறித்த தகவல்களைப் பகிர்ந்து கொள்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
அமெரிக்காவுடனான கனடாவின் உறவை திறம்பட வழிநடத்தும் கார்னியின் திறன், அவரது தேர்தல் பிரசாரத்தின் முக்கிய வாதமாக இருந்தது.
தேர்தலுக்குப் பிறகு, கார்னி வெளிநாட்டுத் தலைவர்களுடனான சந்திப்புகள் உட்பட, பல கூட்டங்கள் மற்றும் சந்திப்புகளில் ஈடுபட்டுள்ளார்.
மே மாதம் 26 ஆம் திகதி நாடாளுமன்றம் மீண்டும் தொடங்குவதற்கு முன்பு, தனது அமைச்சரவையை மார்க் கார்னி அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
