மத்திய அரசாங்கத்தினால் கட்டுப்படுத்தப்படும் துறைகளில் பணியாற்றுவோருக்கான குறைந்தபட்ச ஊதியத்தை, ஒரு மணித்தியாலத்திற்கு 18.15 டொலர்களாக அதிகரிக்கத்
தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள வாழ்க்கைச் செலவு அதிகரிப்பைக் கருத்திற் கொண்டு, இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் 1-ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் இந்த மாற்றத்தை கனடா வேலைவாய்ப்பு மற்றும் சமூக மேம்பாட்டுத் துறை (ESDC) உறுதிப்படுத்தியுள்ளது.
2025-ஆம் ஆண்டின் நுகர்வோர் விலைச் சுட்டெண் 2.1 சதவீதத்தால் உயர்ந்ததைத் தொடர்ந்து, பணவீக்கத்திற்கு ஏற்பவே, இந்த ஊதிய உயர்வு வழங்கப்படுகின்றது. இந்த ஊதிய உயர்வு ஆனது, நேரடியாக மத்திய அரசின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட தனியார் துறை ஊழியர்களுக்குப் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


