Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

வறட்சியைத் தாங்கக்கூடிய பயிரினங்களை வடக்கில் அறிமுகப்படுத்த நடவடிக்கை

மார்ச் 26, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

வடமாகாண விவசாயிகள் எதிர்நோக்கும் நீண்டகாலப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் நோக்கிலான உயர்மட்டக் கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் நேற்றைய தினம் புதன்கிழமை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.

விவசாயத் திணைக்களத்தின் தேசிய பணிப்பாளர் நாயகம் கலாநிதி விக்கிரமாராச்சி தலைமையிலான உயர்மட்டக் குழுவினர் மற்றும் வடக்கு மாகாண விவசாயத் திணைக்கள அதிகாரிகள் பங்கேற்ற இந்தக் கலந்துரையாடல் சுமார் 4 மணிநேரம் இடம்பெற்றது.

இக்கூட்டத்தில் மாகாண விவசாயத்துறையின் தற்போதைய சவால்கள், எதிர்காலத் திட்டங்கள் மற்றும் கொள்கை ரீதியான தீர்மானங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

இக்கலந்துரையாடலை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய ஆளுநர் நா.வேதநாயகன் ,

‘காலநிலை மாற்றம், ஒழுங்கற்ற மழைவீழ்ச்சி, வெள்ளம் மற்றும் நீண்ட வறட்சி என்பன எமது விவசாயிகளின் பயிர்ச்செய்கை நாட்காட்டியில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

அத்துடன் தென்னையில் வெள்ளை ஈ மற்றும் வாழையில் பனாமா போன்ற புதிய நோய்த் தாக்கங்களால் விவசாயிகள் விளைச்சல் இழப்பைச் சந்திக்கின்றனர். இதற்குத் தீர்வாக உயிரியல் கட்டுப்பாட்டு முறைகளுடனான ஒருங்கிணைந்த பீடை முகாமைத்துவத்தை நாம் நடைமுறைப்படுத்த வேண்டும்.

வறட்சியைத் தாங்கக்கூடிய பயிரினங்களை அறிமுகப்படுத்துவதுடன், விவசாயிகளின் பேரம் பேசும் சக்தியை அதிகரிக்க விவசாய அமைப்புக்களை வலுவூட்ட வேண்டும்.

அத்துடன், அரச – தனியார் பங்குபற்றலுடன் பெறுமதி சேர் உற்பத்திகள், குளிரூட்டப்பட்ட களஞ்சியசாலைகள் மற்றும் விவசாயச் பதனிடும் வலயங்களை உருவாக்க வேண்டும். தேசிய மற்றும் மாகாண விவசாயத் திணைக்களங்களுக்கிடையிலான சிறந்த ஒருங்கிணைப்பின் ஊடாகவே இதனைச் சாத்தியமாக்க முடியும் என ஆளுநர் தெரிவித்தார்.

முந்தைய செய்தி யாழில் 57 போதை மாத்திரைகளுடன் ஐவர் கைது
அடுத்த செய்தி ஒரு மணித்தியாலத்திற்கு 18.15 டொலர்களாக ஊதியத்தை அதிகரிக்கத் தீர்மானம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இந்தியா

தொகுதி மறுவரையறை மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என மு.க.ஸ்டாலின் கடும் எச்சரிக்கை

ஏப்ரல் 17, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

சுங்கப் பணிப்பாளர் நாயகமாக பதவியேற்கும் விமல் எஸ்.கே.லியனகம

மே 5, 2026
இலங்கை

ஒரு மில்லியன் ரூபாய் பெறுமதியான மருந்து பொருட்களை கையளித்த மன்னார் மறைமாவட்ட ஆயர்!

டிசம்பர் 10, 2025
இலங்கை

மட்டக்களப்பில் கறுப்பு ஜனவரியையிட்டு ஊடகவியலாளர்கள் தீப்பந்தம் ஏந்தி போராட்டம்.

பிப்ரவரி 3, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?