Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

மெக்கில் பல்கலைக்கழகத்திற்கான நிதியுதவியை மீளப் பெற்றார் நன்கொடையாளர்

மார்ச் 26, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மொன்றியலில் அமைந்துள்ள மெக்கில் பல்கலைக்கழகத்திற்கு நிதியுதவி வழங்கி வந்த முக்கிய நன்கொடையாளர் ஒருவர் தனது ஆதரவை மீளப் பெற்றுள்ளார். மெக்கில் பல்கலைக்கழகத்தின் சட்ட பீட மாணவர்கள் இஸ்ரேலிய கல்வி நிறுவனங்களைப் புறக்கணிக்கும் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்ததைத் தொடர்ந்தே, அந்த நன்கொடையாளர் தனது ஆதரவை மீளப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெக்கில் பல்கலைக்கழகத்தின் சட்ட மாணவர் சங்கம் (LSA) நடத்திய வாக்கெடுப்பில் சுமார் 57 சதவீத மாணவர்கள் இஸ்ரேலுக்கு எதிரான முழுமையான புறக்கணிப்பு திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர். இந்த முடிவின்படி, இஸ்ரேலிய பல்கலைக்கழகங்களுடனான கல்விப் பரிமாற்றங்கள், கூட்டு ஆராய்ச்சித் திட்டங்கள் மற்றும் நிறுவன ரீதியான அனைத்துத் தொடர்புகளையும், மாணவர் சங்கம் துண்டித்துக் கொள்ள வேண்டும் என்ற தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

இந்த நடவடிக்கை தனிப்பட்ட இஸ்ரேலிய பேராசிரியர்களுக்கு எதிரானது அல்ல என்றும், அந்நாட்டு கல்வி நிறுவனங்களின் செயல்பாடுகளுக்கு எதிரானது மட்டுமே என்றும் மாணவர் தலைவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

இந்தத் தீர்மானம் வெளியான சில தினங்களிலேயே, மெக்கில் பல்கலைக்கழகத்திற்கு நீண்டகாலமாக நிதியுதவி வழங்கி வந்த ஒருவர் தனது பங்களிப்பை நிறுத்துவதாக அறிவித்துள்ளார். இத்தகைய புறக்கணிப்பு நடவடிக்கைகள் யூத மாணவர்களைப் பாதிக்கும் என்றும், பல்கலைக்கழக நிர்வாகம் இதில் தலையிடத் தவறிவிட்டதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இதேவேளை, மெக்கில் பல்கலைக்கழகத்தின் சட்ட மாணவர் சங்கத்தின் இந்த முடிவை எதிர்த்து, ஒரு தரப்பு மாணவர்கள் நீதிமன்றத்தை நாடியுள்ளனர். இந்தப் புறக்கணிப்புத் தீர்மானம் மாணவர் சங்கத்தின் யாப்பிற்கு எதிரானது என்றும், இது குறிப்பிட்ட ஒரு தரப்பினருக்கு எதிராகப் பாகுபாடு காட்டுவதாகவும் அவர்கள் வாதிடுகின்றனர்.

இத்தகைய முடிவுகள் இஸ்ரேலிய நிறுவனங்களுடன் கல்வி ரீதியாகத் தொடர்பு கொள்ள விரும்பும் மாணவர்களின் உரிமைகளைப் பறிப்பதாக அவர்கள் தரப்பு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி கியூபெக் மதச்சார்பற்ற சட்டத்திற்கு எதிரான வாதங்கள் அதிர்ச்சியானவை எனச் சாடிய உச்சநீதிமன்ற நீதியரசர்
அடுத்த செய்தி கியூபெக்கின் போயண்ட் கிளேர் பகுதியில் 18 கிலோ கிராம் கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்

பழைய மொன்றியல் தீ விபத்து – எமிலி பெனமோர் கைது

மார்ச் 19, 2026
அண்மைய செய்திகள்கியூபெக்

லவால் மற்றும் டெர்ரெபோன்னில் நூற்றுக்கணக்கான வாடகை வீடுகளை அமைக்க லிபெரல் அரசு திட்டம்..!!

மார்ச் 20, 2025
கியூபெக்முதன்மை செய்தி

மொன்றியல் சட்டவிரோத வீதிப் பந்தய விபத்தில் இளைஞரொருவர் கைது

ஏப்ரல் 30, 2026
கியூபெக்முதன்மை செய்தி

வீதிகளில் இறங்கித் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்திய ஈரானிய மக்கள் 

மார்ச் 2, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?