கியூபெக்கின் பெல்லெசாஸ் (Bellechasse) பிராந்தியத்தில் உள்ள சிறிய நகரமான செயிண்ட்-வாலியரில் (Saint-Vallier), கடந்த நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் மயக்கமான நிலையில் காணப்பட்ட அந்தச் சிறுமி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், அங்கு உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.
உயிரிழந்தவர் ஆரம்பப் பள்ளியில் படிக்கும் மாணவி என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பலத்த காயம் அடைந்த மற்றொரு சிறுமி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும், அவரது காயங்கள் உயிருக்கு அச்சுறுத்தல் இல்லாத நிலை காணப்படுவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவம் விபத்தா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை என்றும் காவல்துறை குறிப்பிட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக கியூபெக் மாகாணப் பொலிஸார் ஒரு கட்டளைப் பிரிவை அமைத்து விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
