Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

கியூபெக்கின் போயண்ட் கிளேர் பகுதியில் 18 கிலோ கிராம் கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல்

மார்ச் 26, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கியூபெக் மாகாணத்தின் போயண்ட் கிளேர் (Pointe-Claire) பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் பொலிஸார் நடத்திய பாரிய சோதனையில், சுமார் 18 கிலோ கிராம் கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அந்த போதைப்பொருளுடன் பெரும் தொகை பணத்தையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

மேலும், இரண்டு கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் பணம் எண்ணும் இயந்திரம் ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. திட்டமிடப்பட்ட குற்றச்செயல் குழுக்களுக்கு எதிரான நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தச் சோதனை முன்னெடுக்கப்பட்டது.

கியூபெக் மாகாண பொலிஸார் (SQ) மற்றும் ஒன்ராறியோவின் விசேட அதிரடிப்படையினர் இணைந்த இந்த நடவடிக்கையில் 25 அதிகாரிகள் பங்கேற்றனர். இந்தச் சம்பவம் தொடர்பாக போயண்ட் கிளேர் பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய நபர் ஒருவர் ஒன்ராறியோ எல்லைக்கு அருகிலுள்ள ரிவியர்- போடெட் (Rivière-Beaudette) பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார்.

முதற்கட்ட விசாரணைகளின் பின்னர் அவர் விடுவிக்கப்பட்ட போதிலும், விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. குறித்த போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பானது ஹெல்ஸ் ஏஞ்சல்ஸ் (Hells Angels) எனும் பாதாள உலகக் கும்பலுடன் தொடர்புடையது எனப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர். கடந்த மார்ச் 17-ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட தொடர்ச்சியான தேடுதல் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகவே இந்தச் சோதனை நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி மெக்கில் பல்கலைக்கழகத்திற்கான நிதியுதவியை மீளப் பெற்றார் நன்கொடையாளர்
அடுத்த செய்தி யாழில் 57 போதை மாத்திரைகளுடன் ஐவர் கைது

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

ஒட்டாவா தமிழர் கொண்டாட்டம் | Ottawa Tamil Fest 2026

Riverside Rhythms

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்முதன்மை செய்தி

விபத்துக்குள்ளான ஏர் கனடா விமானம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பம்

ஜூலை 10, 2026
கியூபெக்விசேட செய்திகள்

கியூபெக் மாகாணத்தின் ஆர்க்காம்போல்ட் (Archambault Institution) சிறைச்சாலையில் இருந்து, கைதி ஒருவர் தப்பியோட்டம்!

ஜூன் 23, 2025
கியூபெக்

கியூபெக்கில் மின்கலன் உதிரிபாகங்கள் தொழிற்சாலையின் விரிவாக்கம் ஒத்திவைப்பு!

அக்டோபர் 17, 2025
அண்மைய செய்திகள்கியூபெக்

கியூபெக் வரலாற்றிலேயே மிகப்பெரிய ’தரவுத் திருட்டு’ வழக்கின் முக்கிய சூத்திரதாரி, மெக்ஸிகோவில் கைது!

ஜூலை 17, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?