கியூபெக் மாகாணத்தில் உள்ள Sainte-Anne-des-Plaines பகுதியில் அமைந்துள்ள ஆர்க்காம்போல்ட் (Archambault Institution) சிறைச்சாலையில் இருந்து, கைதி ஒருவர் தப்பியோடியுள்ளார்.
இரண்டாம் தர கொலைக் குற்றத்திற்காக ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த 62 வயதுடைய ரிச்சர்ட் புளூர்டே (Richard Plourde) என்ற கைதியே குறித்த சிறையிலிருந்து, தப்பி ஓடியுள்ளார். ஜூன் 22ஆம் திகதி இரவு 11 மணிக்கு கைதிகள் கணக்கெடுப்பின் போதே இவ்விடயம் தெரியவந்துள்ளது. மொன்றியலுக்கு வடமேற்கே சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள Sainte-Anne-des-Plaines நகரில் உள்ள ஆர்க்காம்போல்ட் சிறைச்சாலையில், குறைந்தபட்ச பாதுகாப்புப் பிரிவில் அடைக்கப்பட்டிருந்த ரிச்சர்ட் புளூர்டே காணாமல் போனது, சிறை அதிகாரிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
கனடா சீர்திருத்த சேவை (Correctional Service of Canada – CSC) இத்தகவலை உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் கனடா சீர்திருத்த சேவை (CSC) ஆனது, குயெபெக் மாகாண காவல்துறையான Sûreté du Québec உடன் இணைந்து புளூ ர்டேயை கண்டுபிடிக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. ரிச்சர்ட் புளூர்டே ஒரு கொடிய குற்றவாளி என்பதால், அவரைப் பற்றிய ஏதேனும் தகவல் தெரிந்தால், பொதுமக்கள் உடனடியாக காவல்துறையை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.