Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

ஏர் கனடா விமான விபத்தால் மூடப்பட்ட நியூயார்க் விமான நிலையம் மீண்டும் திறப்பு

மார்ச் 24, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

ஏர் கனடா எக்ஸ்பிரஸ் விமானம் விபத்துக்குள்ளானமையால் தற்காலிகமாக மூடப்பட்ட நியூயார்க்கின் லாகார்டியா (LaGuardia) விமான நிலையம் தற்போது மீளவும் திறக்கப்பட்டுள்ளது.
இந்த விமான நிலையத்தில் தரையிறங்கிய ஏர் கனடா எக்ஸ்பிரஸ் விமானம், ஓடுதளத்தில் தீயணைப்பு வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது.

மொன்றியலில் இருந்து 72 பயணிகள் மற்றும் 4 ஊழியர்களுடன் வந்த ஜாஸ் ஏவியேஷன் (Jazz Aviation) நிறுவனத்திற்குச் சொந்தமான ஏர் கனடா எக்ஸ்பிரஸ் என்ற விமானமே இந்த விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விமானம், நேற்று நள்ளிரவு 11:40 மணியளவில், நியூயார்க்கின் லாகார்டியா (LaGuardia) விமான நிலையத்தின் நான்காவது ஓடுதளத்தில் தரையிறங்கியது.

அப்போது, வேறொரு அவசர அழைப்பிற்காக ஓடுதளத்தைக் கடக்க முயன்ற இமான நிலைய தீயணைப்பு வாகனம் மீது, இந்த விமானம் பலமாக மோதியது. இந்த விபத்தில் விமானத்தின் பிரதான விமானி மற்றும் துணை விமானி ஆகிய இரு கனடியர்களும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

விமானத்தில் இருந்த 39 பயணிகள் மற்றும் தீயணைப்பு வாகனத்தில் இருந்த இரு அதிகாரிகள் உட்பட மொத்தம் 41 பேர் காயமடைந்த நிலையில், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். இவர்களில் 9 பேர் இன்னும் பலத்த காயங்களுடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.

இந்த விபத்தைத் தொடர்ந்து லாகார்டியா விமான நிலையம் முழுமையாக மூடப்பட்டு, 585-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. அமெரிக்காவின் தேசிய விசாரணை அமைப்பு இந்த விபத்து குறித்து உயர்மட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளது. விமான நிலைய ஊழியர் பற்றாக்குறை அல்லது சோர்வு காரணமாக இந்தத் தவறு நடந்ததா என்ற கோணத்தில் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது. குறித்த விமான நிலையம் தற்போது திறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி லெபனான் எல்லையில் பணியாற்றும் கனடியப் படையினருக்கு பாதிப்பில்லை – பாதுகாப்பு அமைச்சு
அடுத்த செய்தி கியூபெக்கின் சர்ச்சைக்குரிய மதச்சார்பின்மை சட்ட விசாரணை நேற்று ஆரம்பம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

கிரீன்லாந்தில் புதிய தூதரகத்தை திறந்து வைக்கும் கனேடிய மத்திய அரசு

பிப்ரவரி 6, 2026
கனடாவிசேட செய்திகள்

இடித்து அழிக்கப்படும் வரலாற்றுச் சிறப்புமிக்க 100 வருட பழமையான கட்டடம் !

மே 15, 2025
கனடாமுதன்மை செய்தி

காணொளி குறித்து டொராண்டோ பொலிஸ் சேவை வெளியிட்டுள்ள கருத்து

நவம்பர் 4, 2025
கனடாமுதன்மை செய்தி

ஒட்டாவாவில் முஸ்லிம் சமூகத்திற்கு பிற சமூகங்களிடமிருந்து பலத்த ஆதரவு

செப்டம்பர் 2, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?