கியூபெக் மாகாணத்தின் வாகனக் காப்பீட்டுச் சபை, அறிமுகப்படுத்திய ‘SAAQclic’ இணையதளத் திட்டம் படுதோல்வியடைந்தமை குறித்த, நீதிபதி டெனிஸ் கலாண்டின் (Denis Gallant) இறுதி அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தினால் கியூபெக் அரசுக்கு 500 மில்லியன் டொலர் கூடுதல் நஷ்டம் ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
‘SAAQclic’ இணையதளத் திட்டத்தின் செலவு அதிகரிப்பது தெரிந்தும், அதுகுறித்த உண்மையான தகவல்கள் அமைச்சர்களிடமிருந்தும், மக்கள் பிரதிநிதிகளிடமிருந்தும் திட்டமிட்டு மறைக்கப்பட்டுள்ளன.
இணையதளம் முழுமையாகத் தயாராகவில்லை என எச்சரிக்கைகள் வந்தும், அவற்றைப் புறக்கணித்துவிட்டு அவசரமாகத் திறக்கப்பட்டதால், கியூபெக் பொதுமக்கள் கடும் குளிரில் வரிசையில் நிற்க வேண்டிய அவலநிலை ஏற்பட்டது.
இது வெறும் தொழில்நுட்பத் தோல்வி மட்டுமல்ல, ஒட்டுமொத்த நிர்வாகக் கட்டமைப்பின் தோல்வி என, நீதிபதி டெனிஸ் கலாண்டின் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
