லிபரல் கட்சியின் தலைவரும் கனேடியப் பிரதமருமான மார்க் கார்னி, கனடாவின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் ஒரு விரிவான திட்டத்தை வெளியிட்டார்.
கனடாவில் பெருகி வரும் குற்றக் கும்பல்களின் செயல்பாடுகளை முடக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை முற்றிலும் ஒழித்து, அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனவும் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.
நெருக்கமான உறவுகளுக்குள் நடக்கும் வன்முறைகளைத் தடுக்க சிறப்புத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும் எனத் தெரிவித்த அவர், அமெரிக்காவின் பலவீனமான எல்லைக் கட்டுப்பாடுகள் மற்றும் பொறுப்பற்ற துப்பாக்கிச் சட்டங்களால் கனடாவிற்குள் சட்டவிரோதமாக ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருட்கள் ஊடுருவுவதையும் தடுக்கவுள்ளதாக அறிவித்தார்.
குற்றங்களை ஒழித்து அமைதியான சமூகத்தை உருவாக்குவதே தங்கள் இலக்கு என்றும் மார்க் கார்னி சுட்டிக்காட்டினார்.