மக்கள் நெரிசல், நீண்ட நேர காத்திருப்பு , அறைகள் மற்றும் குடும்ப மருத்துவர் பற்றாக்குறை என்பன கியூபெக்கில் சாதாரணமாக
காணப்படுகின்ற போதிலும்
. கனடாவின் சில சிறந்த மருத்துவ நிறுவனங்களுக்கு மொன்றியல் இன்னும் தாயகமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது
. இதேவேளை மொன்றியல் நகரத்தின் மூன்று மருத்துவமனைகள் நியூஸ் வீக்கின் 2025 ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த மருத்துவமனைகள் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
உலகளாவிய தரவு தளமான ஸ்டேடிஸ்டாவுடன்Statista,) இணைந்து தொகுக்கப்பட்ட இந்த தரவரிசையானது மருத்துவ நிபுணர் கணக்கெடுப்புகள், நோயாளிகளின் திருப்தி, மருத்துவமனை தர அளவீடுகள் மற்றும் நோயாளி-அறிக்கையிடப்பட்ட விளைவு நடவடிக்கைகள் (PROMs) ஆகியவற்றின் அடிப்படையில் உலகளவில் சிறந்த 250 மருத்துவமனைகள் பட்டியல் இடப்பட்டுள்ளன .
இந்த பட்டியலில் 9 கனேடிய மருத்துவமனைகள் இடம்பிடித்துள்ளன
குறித்த தரவரிசைப் பட்டியலில் இடம் பெற்ற ஒன்பது கனேடிய மருத்துவமனைகளில், மூன்று மருத்துவமனைகள் மொன்றியலில் காணப்படுகின்றன
மான்ட்ரியல் பொது மருத்துவமனை – மெக்கில் பல்கலைக்கழக சுகாதார மையம் (MUHC) – 89 உலக தரவரிசை பட்டியலில் 89 வைத்து இடத்திலும்
மான்ட்ரியல் பல்கலைக்கழகத்தின் மைய மருத்துவமனை (CHUM) – (#92 வைத்து இடத்திலும்
யூத பொது மருத்துவமனை – (#130 வது இடத்திலும் காணப்படுகின்றன
மேலும் இந்த தரவரிசைப்பட்டியலில்
டொராண்டோ பொது – பல்கலைக்கழக சுகாதார வலையமைப்பு (#3வது இடத்திலும்
சன்னிபுரூக் சுகாதார அறிவியல் மையம் (டொராண்டோ) 24 வது இடத்திலும் உலகளவில்)
மவுண்ட் சினாய் மருத்துவமனை (டொராண்டோ) 32 வது இடத்திலும்
நார்த் யார்க் பொது மருத்துவமனை (டொராண்டோ) 57 வது இடத்திலும்
செயின்ட் மைக்கேல் மருத்துவமனை – யூனிட்டி ஹெல்த் டொராண்டோ 125 வது இடத்திலும்
டொராண்டோ வெஸ்டர்ன் – பல்கலைக்கழக சுகாதார வலையமைப்பு 226 வது இடத்திலும்
ஒட்டாவா மருத்துவமனை 247வது இடத்திலும் தரவரிசை பட்டியலில் இடம்பிடித்துள்ளன