Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
உலகம்முதன்மை செய்தி

கனடாவில் உற்பத்தியாகும் பொருட்கள் தேவையில்லை – டொனால்ட் ட்ரம்ப்

பிப்ரவரி 3, 2025
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவி ஏற்றபிறகு சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றுவது உள்ளிட்ட அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

அண்டை நாடான மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்தார். எண்ணெய் இயற்கை எரிவாயு மற்றும் மின்சாரம் உள்ளிட்ட கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எரி சக்திகளுக்கு 10 சதவீத வரி விதித்தார். இதைத்தவிர சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதலாக 10 சதவீதம் வரி விதிக்கப்பட்டது.

சட்டவிரோத குடியேற்றம் மற்றும் போதை பொருட்களை அமெரிக்காவுக்குள் கடத்தப்படுவதை தடுக்க அந்நாடுகள் போதிய நடவடிக்கைகள் எடுக்கவில்லை எனக்கூறி அமெரிக்கா இந்த அதிரடி வரிவிதிப்பில் இறங்கியது.

ட்ரம்ப்பின் இந்த நடவடிக்கை கனடா, மெக்சிகோ உள்ளிட்ட நாடுகளுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்கா பொருட்களுக்கு 25 சதவீத இறக்குமதி விதிக்கப்படுவதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்தார். இதே போல சீனா மற்றும் மெக்சிகோ நாடுகளும் அமெரிக்கா பொருட்களுக்கு இறக்குமதி வரி விதித்தது.

இந்த வர்த்தக போரால் அமெரிக்காவின் வளர்ச்சி பாதிக்கப்படும் என்றும் குறுகிய காலத்தில் விலை வாசி உயரும் அபாயம் இருப்பதாக பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர். ஆனாலும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது முடிவில் உறுதியாக இருக்கிறார்.

அமெரிக்கா வரிகளுக்கு எதிராக பதிலடி நடவடிக்கை யாக கனடா, மெக்சிகோ நாடுகள் செயல்படுகிறது. இதனால் அமெரிக்க மக்கள் பொருளாதார வலியை உணரக்கூடும்.

அமெரிக்க நலனை பாதுகாக்க இந்த வலிக்கு விலை மதிப்பு அதிகம். நாங்கள் அமெரிக்காவை மீண்டும் சிறந்ததாக மாற்றுவோம். கனடாவில் உற்பத்தி யாகும் எந்த பொருளும் எங்களுக்கு தேவையில்லை. எங்களுக்கு ஆற்றல் இருக்கிறது.

நாங்கள் சொந்தமாக அந்த பொருட்களை உருவாக்குவோம். எங்களுக்கு தேவையான அளவை விட அதிகமாக வைத்து இருப்போம்.

கனடாவை அமெரிக்காவின் 51-வது மாகாணமாக உருவாக்குவோம். இதன் மூலம் கனடா மக்களுக்கு மிக குறைவான வரி, ராணுவ பாதுகாப்பு ஆகியவைகளை வழங்க முடியும்.

என அவர் கூறினார்.

 

முந்தைய செய்தி வாதுமை பருப்பு (Walnut) சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்….
அடுத்த செய்தி நாடளாவிய ரீதியில் மதுபானசாலைகளுக்கு பூட்டு.

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்முதன்மை செய்தி

வில்-மேரி சுரங்கப்பாதை மூடப்பட்டுள்ளதாக அறிவிப்பு

ஏப்ரல் 11, 2026
அண்மைய செய்திகள்உலகம்

பாகிஸ்தான் உள்ளிட்ட 41 நாடுகளுக்கு பயணத் தடை விதிக்க ட்ரம்ப் நிர்வாகம் பரிசீலனை..!!

மார்ச் 15, 2025
உலகம்

அசாதாரண தட்பவெப்பம் காரணமாக 3,238 பேர் உயிரிழப்பு.

நவம்பர் 13, 2024
கனடாமுதன்மை செய்தி

கனடா தயாரிக்கும் விமானங்களுக்கு அமெரிக்கா தடை விதிக்கப்போவதாக அறிவிப்பு

ஜனவரி 30, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?