நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் நாளை (04) மூடப்படவுள்ளது.
இலங்கையின் 77 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இவ்வாறு அனைத்து மதுபானசாலைகளும் நாளை மூடப்படவுள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாளைய தினம் மதுபான விற்பனையில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மதுவரி திணைக்கள ஆணையாளர் நாயகம் உதய குமார பெரேரா தெரிவித்துள்ளார்.