Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
ஆரோக்கியம்

வாதுமை பருப்பு (Walnut) சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்….

பிப்ரவரி 3, 2025
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

உலர் பழங்களின் ராஜா என்று அழைக்கப்படும் வாதுமை பருப்பு (Walnut), மூளைக்கு ஆற்றலை வழங்கக் கூடியது என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், அது மூளைக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் மிகவும் பயனுள்ள உலர் பழமாகும்.

உலர் பழங்களின் ராஜா என்று அழைக்கப்படும் வாதுமை பருப்பு (Walnut), மூளைக்கு ஆற்றலை வழங்கக் கூடியது என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், அது மூளைக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் மிகவும் பயனுள்ள உலர் பழமாகும். குறிப்பாக, முதுமையை விரட்டி அடித்து, இளமையை தக்க வைத்துக் கொள்ள வாதுமை பருப்பு உதவும். இதில் உள்ள ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இது பல நோய்களிலிருந்து நம்மைப் பாதுகாக்க உதவுகிறது.

ஆரோக்கியமான கொழுப்பு, நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் வாதுமை பருப்பில் காணப்படுகின்றன. என்றும் இளமையாக இருக்க விரும்புபவர்கள் வாதுமை பருப்பை கண்டிப்பாக சாப்பிட வேண்டும். இது ஒரு சிறந்த ஆண்டி- ஏஜிங் உணவு. வாதுமை பருப்பு, ஆரோக்கியமான, பளபளப்பான சருமத்தை தருகிறது. இதில் உள்ள ஆரோக்கிய கொழுப்புகள் சரும் சுருக்கங்களை நீக்குகிறது.

பாதாம் மற்றும் முந்திரி பருப்புகளை பலர் சாப்பிடுவார்கள். ஆனால், வாதுமை பருப்பிற்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. வாதுமை பருப்பை சரியான முறையில் சாப்பிட்டால், உங்களால் நினைத்துக்கூட பார்க்க முடியாத பலன்கள் கிடைக்கும். வாதுமை பருப்பினால் கிடைக்கும் பிற நன்மைகள் குறித்தும், அதனை சாப்பிடும் சரியான முறை குறித்தும் அறிந்து கொள்ளலாம்.

மத்திய தரைக்கடல் உணவில் அதிகமாக பயன்படுத்தப்படும், வாதுமை பருப்பு, இதயத்திற்கு நல்லது என்று கருதப்படுகிறது. இதனால் இதயத்தின் செயல்பாடுகள் சிறப்பாக இருப்பதோடு, அது தொடர்பான நோய்களும் அண்டாது என்கின்றனர் நிபுணர்கள். மூளை மிக வேகமாக வேலை செய்யும். சர்க்கரை நோய், புற்றுநோய் ஆகியவையும் அண்டாது.

மூளை கூர்மை

வாதுமை பருப்பு மூளையை கூர்மையாக்க பயனுள்ளதாக இருக்கும். இது மூளை உணவு என்று அழைக்கப்படுகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

இதய ஆரோக்கியம்

வாதுமை பருப்பில் உள்ள நல்ல கொழுப்புகள் இதயத்திற்கு நல்லது மற்றும் ஆரோக்கியமானது. தற்போது இளைஞர்களுக்கும் மாரடைப்பு ஏற்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில், இந்த உணவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

சரும ஆரோக்கியம்

முதுமையை தடுத்து நிறுத்தும் ஆற்றல் வாதுமை பருப்பில் மறைந்துள்ளது. சருமத்தை இளமையாக வைத்திருக்கும். ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் விற்றமின் ஈ சருமத்தை சுருக்கங்களில் இருந்து பாதுகாக்கிறது.

கூந்தல் ஆரோக்கியம்

முடி உதிர்தலை தடுக்கவும், முடி வளர்ச்சியை பெறவும் இந்த உலர் பழத்தை சாப்பிட வேண்டும். இது முடியின் வேர்களை வலுப்படுத்தும். இதனால் வழுக்கையையும் தடுக்கலாம்.

நோய் எதிர்ப்பு சக்தி

வாதுமை பருப்பில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளதால், நோய்கள் வராமல் பாதுகாக்கிறது. மேலும் தேனுடன் சாப்பிட்டால் ஆற்றல் அதிகரிக்கும். உங்கள் உடல்நிலை சீராக இருக்கும், நீங்கள் சோர்வடைய மாட்டீர்கள்.

வாதுமை பருப்பு சாப்பிட சரியான வழிகள்

1. இரவு முழுவதும் 3 – 4 வாதுமை பருப்புகளை ஊறவைத்து, காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுங்கள். ஊற வைப்பதால், அதன் ஊட்டச்சத்து இரட்டிபாகிறது. அதோடு ஜீரணிக்க எளிதாகிறது.

2. வாதுமை பருப்பை ஸ்மூத்திகள், சாலட்கள் மற்றும் ஓட்ஸ் கஞ்சி, ராகி க்ஞ்சி ஆகியவற்றில் சேர்த்து சாப்பிடுங்கள்.

 

முந்தைய செய்தி மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் நீதியரசராக மொஹமட் லபார் தாஹிர் நியமனம்.
அடுத்த செய்தி கனடாவில் உற்பத்தியாகும் பொருட்கள் தேவையில்லை – டொனால்ட் ட்ரம்ப்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்ஆரோக்கியம்

பல நோய்களுக்கான ஒரே மருந்து!

மார்ச் 14, 2025
ஆரோக்கியம்

வாழைப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்…

பிப்ரவரி 3, 2025
ஆரோக்கியம்

பேரிக்காய் பழத்தின் நன்மைகள் !

மார்ச் 31, 2025
ஆரோக்கியம்

தேனுடன் பூண்டு ஊற வைத்து சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்…

பிப்ரவரி 3, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?