Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
ஆரோக்கியம்

மட்டனை வச்சு இந்த மாதிரி சுக்கா வறுவல் செய்து பாருங்க….

ஜனவரி 15, 2025
படிக்க 3 நிமிடங்கள்
SHARE

உங்கள் வீட்டில் வாங்கும் மட்டனை எப்போதும் வழக்கமாக செய்வது போன்று அதைக் கொண்டு வெறும் குழம்பு செய்யாமல், ஒருமுறை அதைக் கொண்டு சுக்கா வறுவலை செய்யுங்கள். இப்படி மட்டன் சுக்கா வறுவல் செய்யும் போது சுவை அள்ளும். மேலும் இது அனைத்துவிதமான உணவுகளுடனும் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும். குறிப்பாக இந்த வறுவலுக்கு தனியாக மசாலா வறுத்து அரைத்து செய்வதால், சுவை வேற லெவலில் இருக்கும்.

உங்களுக்கு மட்டன் சுக்கா வறுவலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மட்டன் சுக்கா வறுவல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:
வறுத்து பொடி செய்வதற்கு…

* அன்னாசிப்பூ – சிறிது

* பட்டை – 2 துண்டு

* கிராம்பு – 5

* ஏலக்காய் – 2

* சோம்பு – 1 டீஸ்பூன்

* சீரகம் – 3/4 டீஸ்பூன்

* மிளகு – 1/2 டீஸ்பூன்

* கசகசா – 3/4 டீஸ்பூன்

* மல்லி – 1 1/2 டீஸ்பூன்

* பிரியாணி இலை – 1

* கறிவேப்பிலை – 2 கொத்து

* வரமிளகாய் – 7

* காஷ்மீரி வரமிளகாய் – 2

* நல்லெண்ணெய் – 2 டீஸ்பூன்

* உப்பு – சுவைக்கேற்ப

* மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்

* மட்டன் – 1 கிலோ

தாளிப்பதற்கு…

* நல்லெண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்

* சின்ன வெங்காயம் – 2 கைப்பிடி (பொடியாக நறுக்கியது)

* உப்பு – சுவைக்கேற்ப

* கறிவேப்பிலை – 1 கொத்து

* வரமிளகாய் – 2

* கொத்தமல்லி – சிறிது

* இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்

* தக்காளி – 1 (அரைத்தது)

* தயிர் – 1 டேபிள் ஸ்பூன்

* தண்ணீர் – சிறிது

செய்முறை: * முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் அன்னாசிப்பூ, பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு, சீரகம், மிளகு, கசகசா, மல்லி, பிரியாணி இலை, கறிவேப்பிலை, வரமிளகாய், காஷ்மீரி வரமிளகாய் சேர்த்து குறைவான தீயில் வைத்து, நன்கு வறுத்து இறக்கி குளிர வைத்து, மிக்சர் ஜாரில் போட்டு நன்கு பொடி செய்து கொள்ள வேண்டும்.

* பின் ஒரு அகலமான பாத்திரத்தில் அரைத்த பொடியை சேர்த்து, அத்துடன் நல்லெண்ணெய் ஊற்றி, சிறிது உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

* பின்பு மட்டனை நன்கு கழுவி, அதை அந்த பேஸ்ட்டுடன் சேர்த்து கைகளால் நன்கு பிரட்டி விட வேண்டும்.

* அடுத்து ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் 3 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்து, சிறிது உப்பு தூவி நன்கு வதக்க வேண்டும்.

* பின் அதில் கறிவேப்பிலை, வரமிளகாய், கொத்தமல்லி, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு 1 நிமிடம் வதக்க வேண்டும்.

* அடுத்து அதில் அரைத்த தக்காளியை சேர்த்து, பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.

* பிறகு அதில் தயிரை ஊற்றி நன்கு கிளறி விட்டு, பின் மட்டன் துண்டுகளை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

* பின் அதில் மட்டன் மூழ்கும் அளவில் நீரை ஊற்றி கிளறி, குக்கரை மூடி 5 விசில் விட்டு, பின் குறைவான தீயில் வைத்து, 5 நிமிடம் வேக வைத்து இறக்க வேண்டும்.

* குக்கரில் உள்ள விசில் போனதும், குக்கரைத் திறந்து, மீண்டும் அதை அடுப்பில் வைத்து, மட்டனில் உள்ள நீர் வற்றும் வரை வேக வைத்து இறக்கினால், சுவையான மட்டன் சுக்கா வறுவல் தயார்.

 

 

முந்தைய செய்தி வவுனியா தெற்கு வலய கல்விப்பணிப்பாளராக முகுந்தன் கடமையை பொறுப்பேற்றார்.
அடுத்த செய்தி முல்லைத்தீவு மாட்டத்தில் “தூய்மையான இலங்கை” (Clean Sri Lanka) திட்டம் தொடர்பில் கருத்தரங்கு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்ஆரோக்கியம்

முட்டை பற்றிய சில ரகசியம் அறிந்து கொள்ளுங்கள்

ஜனவரி 25, 2026
அண்மைய செய்திகள்ஆரோக்கியம்

கொலஸ்ட்ரால் முதல் weight loss வரை – வெறும் வயிற்றில் 10 கறிவேப்பிலை போதும்

ஏப்ரல் 11, 2025
அண்மைய செய்திகள்ஆரோக்கியம்

கற்பூரவள்ளியின் மருத்துவப் பயன்கள் !

மார்ச் 18, 2025
அண்மைய செய்திகள்ஆரோக்கியம்

உடல் சூட்டைத்தணிக்கும் சாமந்திப் பூ

மே 7, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?