வட மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட கல்வி அதிகாரிகளுக்கிடையிலான இடமாற்றத்தை அடுத்து வவுனியா தெற்கு வலய கல்விப் பணிப்பாளராக த. முகுந்தன் நியமிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அவர் கடமைகளை பொறுப்பேற்றார்.
இதுவரை காலமும் வவுனியா தெற்கு வலய கல்விப்பணிப்பாளராக கடமை ஆற்றிய திருமதி சு. அன்மலர் துணுக்காய் வலய கல்வி பணிப்பாளராக இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில் வடமாகாண கல்வித் திணைக்களத்தின் பிரதி கல்வி பணிப்பாளராக கடமை ஆற்றிய த. முகுந்தன் வவுனியா தெற்கு வலய கல்விப்பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.