யாழ்ப்பாண மாவட்டச் செயலக தைப் பொங்கல் நிகழ்வு இன்றைய தினம் புதன்கிழமை யாழ் மாவட்ட செயலக முன்றலில் மாவட்ட செயலக நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன், மேலதிக செயலர் (காணி) க.ஸ்ரீமோகனன் உள்ளிட்ட மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டிருந்தார்கள்.