கியூபெக்கில் வரும் இலையுதிர் காலம் முதல், கோவிட்-19 தடுப்பூசிகள் அனைவருக்கும் இலவசமாக வழங்கப்படாது என்று மாகாண சுகாதார அமைச்சகம் புதன்கிழமை அறிவித்துள்ளது.
இனி, ஆபத்து நிறைந்த பிரிவினருக்கு மட்டுமே தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும்.
மற்றவர்கள் மருந்தகங்களில் ஒரு டோஸுக்கு $150 முதல் $180 வரை செலுத்த வேண்டியிருக்கும் என கியூபெக்கின் மருந்தக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் தடுப்பூசி நிதியுதவி முடிவடைந்ததையடுத்து, தடுப்பூசிகளை வாங்குதல் பொறுப்பு மாகாண மற்றும் பிராந்திய அரசுகளுக்கு மாறியுள்ள நிலையில், இந்த கொள்கை மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.
கியூபெக் பொது சுகாதார இயக்குநர் லூக் போயிலோ (Dr. Luc Boileau) இது குறித்து கூறுகையில், ”ஆபத்து நிறைந்த பிரிவினர் அல்லாத பெரும்பாலான மக்கள் ஏற்கெனவே நோய்த்தொற்று அல்லது தடுப்பூசி மூலம் நோய் எதிர்ப்பு சக்தியைப் பெற்றுள்ளனர்” என்று குறிப்பிட்டார்.


