கனடியப் பொருளாதாரத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் நோக்கில், உலகத்தரம் வாய்ந்த முதலீட்டாளர்களைக் கொண்ட கனடா முதலீட்டு உச்சிமாநாட்டை (Canada Investment Summit) பிரதமர் மார்க் கார்னி இன்று அறிவித்துள்ளார்.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் 14 மற்றும் 15 ஆகிய திகதிகளில் டொராண்டோவில் இந்த மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டின் மூலம், அடுத்த ஐந்து ஆண்டுகளில் 1 டிரில்லியன் டொலர் முதலீட்டை கனடாவை நோக்கி ஈர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
உலக அளவில் நிலவி வரும் அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரமற்ற சூழலைப் பயன்படுத்தி, கனடாவை ஒரு பாதுகாப்பான முதலீட்டு இடமாக
(Safe Haven) மாற்றப் பிரதமர் மார்க் மார்னி திட்டமிட்டுள்ளார். சுத்தமான எரிசக்தி (Clean Energy), அத்தியாவசிய கனிமங்கள் (Critical Minerals), செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளான துறைமுகங்கள் மற்றும் குழாய்த்தொடர் (Pipelines) திட்டங்களில் இந்த முதலீடுகள் கோரப்பட்டுள்ளன.
பிளாக்ராக் (BlackRock) போன்ற உலகின் மிகப்பெரிய தனியார் முதலீட்டு நிறுவனங்கள் மற்றும் சிங்கப்பூரின் ஜி.ஐ.சி (GIC) போன்ற அரசாங்க நிதி
நிறுவனங்கள் உட்பட 100-க்கும் மேற்பட்ட சர்வதேச நிதி நிறுவனங்களுக்கு, பிரதமர் கார்னி நேரடி அழைப்பு விடுத்துள்ளார். இந்த மாநாட்டை கனடாவின் முன்னணி ஓய்வூதிய நிதி அமைப்புகளான CPPIB மற்றும் PSP ஆகியவற்றுடன் இணைந்து மத்திய அரசு நடத்துகிறது.
திட்டங்களுக்கான அனுமதியை விரைவுபடுத்த 'முக்கிய திட்டங்களுக்கான அலுவலகம்& (Major Projects Office) உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தேவையற்ற சிவப்பு நாடா முறைகள் (Red Tape) குறைக்கப்படும் என, பிரதமர் கார்னி உறுதியளித்துள்ளார்.
