Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

கியூபெக்கில் பிரெஞ்சு மொழி மற்ற மொழிகளை விட தெளிவாக மேலோங்கி இருக்க வேண்டுமென அறிவுறுத்தல்!

ஜூன் 3, 2025
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

கியூபெக் மாகாணத்தில் உள்ள கடைகளின் பெயர்ப்பலகைகளிலும் வணிக விளம்பரங்களிலும் பிரெஞ்சு மொழி மற்ற மொழிகளை விட தெளிவாக
மேலோங்கி இருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

பிரெஞ்சு மொழி மற்ற மொழிகளை விட இரு மடங்கு பெரியதாக இருக்க வேண்டும் என்ற விதி கட்டாயமாக, கடைப்பிடிக்கப்பட வேண்டிய சூழ்நிலை, கியூபெக்கில் உருவாகியுள்ளது. ஆங்கிலப் பெயர்களைக் கொண்ட கடைகள், தங்கள் பெயர்ப்பலகையில் பிரெஞ்சு மொழியில் பொதுவான சொற்களையோ அல்லது விளக்கங்களையோ சேர்க்க வேண்டும் எனவும் இது பலகையில் உள்ள உரையின் மூன்றில் இரண்டு பங்கை நிரப்ப வேண்டும் எனவும்
அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கனேடிய சில்லறை வணிகக் கவுன்சிலின் கியூபெக் தலைவர் மைக்கேல் ரொஷெட்டி இந்தி விதிகள் குறித்து கூறுகையில், ”இந்த மாற்றங்களைச்
செய்ய மாநகராட்சி விதிகள் மற்றும் நில உரிமையாளர்களின் அனுமதிகளைப் பெற வேண்டும் என்பதால், இது அதிக காலம் எடுக்கும்
செயன்முறை” என்று கூறினார்.

ஆயினும், கியூபெக் மாகாணத்துக்கான பிரெஞ்சு மொழி அமைச்சர் ஜீன்- பிரான்சுவா ரொபேர்ஜ், பல நிறுவனங்கள் ஏற்கனவே தங்கள் பெயர்ப்பலகைகளை மாற்றிவிட்டதாகவும், இது சாத்தியமான காரியமே என்றும் தெரிவித்தார்.

இதேவேளை, தயாரிப்புப் பொதிகளுக்கான பிரெஞ்சு மொழி விதிமுறைகள் இப்போது மேலும் கடுமையாக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே தயாரிப்பு லேபிள்கள் பிரெஞ்சில் மொழிபெயர்க்கப்பட வேண்டும் என்ற கட்டாயம் இருந்தாலும், மற்ற மொழிகளில் உள்ள வர்த்தக முத்திரைகளுக்கு விதிவிலக்கு அளிக்கப்படுகிறது. இவை தவிர, 50 அல்லது அதற்கு மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட வணிக நிறுவனங்கள் தங்கள் பணியிடத்தில் பிரெஞ்சு மொழி மேலோங்கியிருப்பதை உறுதிசெய்ய பிரெஞ்சுமயமாக்கல் (francization) செயல்முறைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்ற விதியை ஏற்கனவே, கியூபெக் அரசாங்கம் அமுற்படுத்தியிருந்தது. எனினும் இப்போது 25 முதல் 49 ஊழியர்களைக் கொண்ட நிறுவனங்களும் பிரெஞ்சுமயமாக்கல் (francization) செயல்முறைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இந்த வணிக நிறுவனங்கள் கியூபெக்கின் மொழி கண்காணிப்பு அலுவலகத்தில் ( ‘Office Quebecois de la langue française’ ) பதிவு செய்யப்பட வேண்டும் எனவும் கியூபெக் மாகாண அரசின் புதிய விதிமுறைகள் அறிவுறுத்துகின்றன.

முந்தைய செய்தி தமிழ் தேசியப் பேரவை மற்றும் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி ஆகிய தரப்புக்களிடையேயான ஒப்பந்தம் கைச்சாத்து !
அடுத்த செய்தி கனேடிய அரசின் முக்கியக் கூட்டங்களில் பழங்குடி சமூகத் தலைவர்கள் புறக்கணிக்கப்பட்டதால், கடும் அதிருப்தி!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஆத்மஜோதி தமிழர் இணையத்தின் முத்தமிழாராம் 2026

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக் மாகாணத்தில் குடல் ஒட்டுண்ணித் தொற்று வரலாறு காணாத வகையில் அதிகரிப்பு!

ஆகஸ்ட் 6, 2026
கனடா

மத்தியகிழக்கில் நிலவும் போர் தொடர்பில் ஆளும் லிபரல் கட்சிக்குள் கடும் எதிர்ப்பு

மார்ச் 6, 2026
கனடாமுதன்மை செய்தி

ஒண்டாரியோ மாகாண சபைத் தேர்தலில் களமிறங்கும் தமிழ் வேட்பாளர்கள்!

பிப்ரவரி 6, 2025
கியூபெக்முதன்மை செய்தி

Jacques-Cartier மேம்பாலத்தின் அடிப்பகுதியில் தற்காலிகக் கூடாரம் ஒன்றிற்குள் இருந்து நபர் ஒருவர் சடலமாக மீட்பு

ஜூன் 26, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?