கனடாவின் சஸ்கடூன் நகரில் நடைபெற்ற பிரதம மந்திரி மார்க் கார்னி மற்றும் மாகாண தலைவர்களின் முக்கியக் கூட்டங்களில் இருந்து பழங்குடி
சமூகத் தலைவர்கள் புறக்கணிக்கப்பட்டதால், அவர்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
வர்த்தகம், வரி விதிப்புகள் மற்றும் உள்கட்டமைப்பு போன்ற முக்கியப் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்ட இக்கூட்டங்களில் பழங்குடி சமூகங்களின் பிரதிநிதிகள் சேர்க்கப்படாதது ஏற்றுக்கொள்ள முடியாதது மற்றும் அவமரியாதை என்று அவர்கள் வர்ணித்துள்ளனர்.
பெரிய திட்டங்கள் பற்றிய பேச்சுவார்த்தையிலும் பழங்குடி சமூகங்களை இணைத்துக்கொள்ள வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். உள்நாட்டு வர்த்தகம், வரி விதிப்புகள், குழாய் இணைப்புகள், அனைத்து முக்கிய திட்டங்கள் பற்றிய எந்தவொரு விவாதத்திலும் பழங்குடி சமூகங்கள் நிச்சயமாக இணைக்கப்பட வேண்டும்" என்று பழங்குடி சமூகத் தலைவர்கள் கோரியுள்ளனர்.
